பயணம்
இரண்டு வாரங்களுக்கு முன்னால் என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்காக இந்தியா வந்திருந்தேன்.
எனக்கு விமான நிலையங்களில் காத்திருப்பது ஒரு பிடிக்கத விஷயம். அதனால் சியாட்டில் ஃப்ராங்ஃப்ர்ட், சென்னை மார்கமாக 21 மணி நேரத்தில் வருவது எனது வாடிக்கை.
லுஃப்தான்சா விமானத்தில் வழக்கம் போல செக்-ன் செய்து, விமானத்தில் அமர்ந்தவுடன் ஒரே தாகம். கொஞ்சம் தண்ணீர் கேட்டவுடன், ஏர்-ஹோஸ்டஸ் எரிந்து விழுந்து விட்டு தண்ணீர் தந்தாள். விமானம் கிளம்பிய ஒரு மணி நேரம் கழித்து லன்ச் என்ற பெயரில் எதோ கொடுத்தார்கள்.
அதை கொடுத்தபோது எனக்கு முன்னால் இருந்த வெள்ளைக்காரனுக்கு பணிவாகவும் எனக்கு கொஞ்சம் ரூடாகவும் கொடுதார்கள். உனக்க்கு குடிக்க என்ன வேண்டும் என்று என்னைக் கேட்டபோது அதில் இருந்த செருக்கும், இனப்பாகுபாடும் அப்பட்டமாகத் தெரிந்தது. நான்கு வருடங்களுக்குப் முன்பு இந்த மாதிரி இல்லை.
ஃப்ராங்ஃப்ர்ட் ஐரோப்பவில் மிகப் பெரிய சந்திப்பு. அனால் ரெஸ்ட்ரூம்கள் வசதி மிக மோசம். ஃப்ராங்ஃப்ர்ட் சென்னை விமானத்தில் என் பக்கத்து சீட்டில் ஒரு காலேஜ் படிக்கும் என்று நினைக்கிறேன், ஒரு பெண் அமர்ந்து வந்தது. பொதுவாக பயணங்களில் தெரிந்தவரோ, தெரியாதவரோ பார்த்தவுடன் ஒரு ஹாய் சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் பெண் கொஞ்சம் கூட சிரிக்கவே இல்லை. மேலும் அரகண்ட்டாக இருந்தது. அவளது செயல்பாடுகள் அனைத்தும் அரகண்ட்டாக இருந்தது. பயணம் முழுவதும் ஏர்-ஹோஸ்டஸ் உட்பட எல்லோரையும் முறைத்துக் கொண்டு வந்தது.
இமிகிரேஸ்ஷன் ஃபார்மில் தப்புத் தப்பாக எழுதியது, நானும் நமக்கு என்ன என்று விட்டு விட்டேன். அந்தப் பெண் செய்த குழப்படிகளில், இமிகிரேஸ்ஷனில் கேள்வி மேல் கேள்வி கேட்ட்டு நிற்க வைத்து விட்டார்கள். சில சமயங்களில் ஒரு சின்ன ஹலோ, ஒரு புன்னகை நம்முடைய சிக்கல்களைத் தீர்த்துவிடும். எனோ எனக்கு அந்தப் பெண்னுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை. மீதி பயணம் அடுத்த பதிவில்.
உணவு:
நேற்று மாஜியானோ என்று ஒரு இத்தாலியன் ரெஸ்டரண்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா உணவிலும் ஒரே ச்சீஸ் .
சுத்தமாக காரம் இல்லை.ஸ்பெகத்தி, பாஸ்தா, 4 ச்சீஸ் ராவியோலி, கார்லிக் பிரட் என்று நல்ல ட்ரீட். அனேகமாக ரெண்டு பவுண்டு ஏறியிருக்கும். எனக்கு ஐரோப்பிய அமெரிக்க உணவுகளை பற்றி ஆராய ஒரு எண்ணம் உள்ளது.
கொஸ்டின் கோயிந்து?
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்பதோடு நிற்காமல்
வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் லோக்பால் உண்ணா விரதத்தை ஒரே மாதத்தில் உலகளாவிய பிரச்சினையாக மாற்றிவிட்ட மீடியா, உயிர் போகிற இந்த அத்யாவசிய, அவசரப் பிரச்சினைக்காக ஆதரவு காட்ட வேண்டும், என்று பாரதிராசா அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.
அப்ப ஆறேழு வருஷத்துக்கு முன்ன சின்ன சின்ன பிரச்சனையா இருந்த காவிரிப் பிரச்சனைக்கு நெய்வேலில போயி என்ன மைத்துக்கு போராட்டம் பண்ணுன? நியென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? அது வெளம்பரம் இல்லயா? பொடாவுல உள்ள வச்சுவனுங்கன்னு ஈழத்தமிழ் மக்கள் பத்தி கொஞ்ச நாளா வாயே திறக்கல. வெளம்பரமோ என்ன எழவோ அந்தாள் போரடுரார். உண்ணாவிரத இருக்கார். நீ என்ன கிழிச்ச நைனா? உன்படம் ஆரம்பிச்சதால மீடியாவுல உன் பேர் வரணும். உனக்கு இயக்குனர் சங்கத்தேர்தலிலேயே ஆப்பு வச்சுருக்க்ணும். கொஞ்சம் வாய கொற. மொதல்ல படத்த எடு. உங்கிட்ட நாங்க எதிர்பாப்பது மொதமரியாத மாதிரி நல்ல படங்கள. இந்த மாதிரி லூசுத்தனமான பேட்டிய இல்ல.