ஜனாதிபதி தேர்தல்

நம்ம இளாங்கோவன் அவர்கள் வழக்கம் போல ஒரு கமெண்ட் அடித்துள்ளார்.

அப்துல் கலாம் ஏற்கனவே 5 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு தனக்கு பதவி ஆசை இருப்பதை காட்டினால் அவரது அந்தஸ்து, மரியாதை போய்விடும். தேர்தலில் போட்டியிடுவதை விட்டுவிட்டு அவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும். அவர் குதிரை பூட்டிய சாரட்டில் செல்ல இனியும் ஆசைப்படக் கூடாது.

அப்போ நீ என்ன --- க்கு மறுபடியும் தேர்தலில் நின்ன? மன்மோகன் சிங் எதுக்கு நீன்னார்? கலாம் ஆராய்ச்சியில் ஈடு படட்டும். காங்கிரஸ் நாட்டை சுரண்டட்டும்.

பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொள்ளும் இவர், ச‌ங்மாவை யானை வாரியத்தலைவராகச் செயியலாம் என்று சொல்கிறார். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த பிராமணீயத்தை எதிர்த்தார். இவர் அவர்களின் அடிவருடி பதவி  வாங்க நினைக்கிறார்.

கலாமைப் பற்றை பேச உனக்கு எந்தத் தகுதியும் இல்லை.

டெசோ

டெசோ மாநாட்டுக்கு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களை அழைக்கும் திமுக!

இனி யாருக்காக இந்த மாநாடு தலைவரே? தலைவர் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னேரம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்.

சீமான்

சீமான் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்...

கல்யாணம் சீரும் காளையையும் சூப்பு போட்டு குடித்து விடும். உங்கள் நம்பகத்தன்மை போய்விடும். கேப்டன் குடும்பம், த‌லைவர் குடும்பம் போல உங்களது குடும்பமும் கட்சியை கூறு போடும்.

தமிழ் ஈழம், தமிழ என்று இனிமேல் ஜ‌ல்லி அடிக்க முடியாது, தலைவரும் அவரது கட்சியும், தமிழ் குடிதாங்கி நம்ம மருத்துவரும் ஏற்கனவே துண்டுபோட்டு போணி பண்ணிட்டாங்க.. மக்களும் முழிச்சுகிட்டாங்கள். ஆமா உன் படத்துக்கு கதாநாயகி எந்த ஊரு? ஒண்ணு சிலோன், இன்னோன்னு கேரளா... நீ பேசாத.....

கலைஞரை தூத்தும் நீ மட்டும் என்ன புடுங்கின? முதல் அமைச்சர் பதவிங்கிறது ஒரு முள் கிரீடம். அவர் மட்டுமல்ல நீயே அந்த பதவீல இருந்திருந்தாலும் ஒரு ----- புடுங்கீருக்க முடியாது. அவர் ஆண்டவரை நன்றாகத்தான் ஆண்டார்.