என மகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் என்றால் ரொம்பப்பிடிக்கும். அதனால்தான் என் வீட்டுக்கு அருகில் இருந்த வாட்டர் பார்க்கில் ஸ்ட்ராபெரி திருவிழா என்றதும், ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
இருபது வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, விடலைப் பருவத்தில் எங்களுக்கு மே மாதம் வரும் அந்தத் திருவிழா ஒரு இனிய அனுபவம். முதலில் மாரியம்மன் பூச்சொரிதல் எப்ரல் மாதத்தில் நடக்கும். பொதுவாக எங்களுக்கு அது தேரிவு சமயம். ஒவ்வொரு தெருவிலிருந்தும் தேர் எடுத்துவருவார்கள். அன்று இரவு படம் அல்லது ரெக்கார்ட் டான்ஸ் இருக்கும். தேருக்கு முன்னால் கரகாட்டமோ அல்லது ஏதோ ஒரு ஆட்டம் இருக்கும்.
பூ வுக்கு அடுத்த வாரம் மஞ்சு விரட்டு. அதற்கு அடுத்தவாரம் திருவிழா. திருவிழா என்பது கிராமத்தின் அடையாளம். வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் கண்டிப்பாக வருவார்கள். சாமி ஊர்வலம், தரையடி கடைகள், பலகாரக்கடைகள் , கனகாம்பரம் அணிந்த பெண்கள் மற்றும் இரவு பாட்டுக் கச்சேரி என்று களைகட்டும்.
கிராமத்துத் திருவிழாக்கள் சமீபகாலங்களாக அழிந்து வருகிரது. அல்லது சாதி சாயம் பூசப்பட்டு வருகிரது. தனது சாதியை வெளிப்படையாகப் போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதும் அதில் எதாவது ஒரு கட்சியின் பெயர் இருப்பதையும் நான் நிறையப் பார்க்கிறேன்.
ஒரு காலத்தில் திரு விழா என்பது கிராமப் பொருளாதரத்தின், வாழ்வாராத்தின் அடிப்படை. இப்போது அதன் அச்சு முறிக்கப்பட்டு விட்டது. தோனியும், டெண்டுல்கரும் சிரிக்கும் விளம்பரங்கள் அதன் மீதி சாரத்தை உறிஞ்சுகின்றன.

ஸ்ட்ராபெரி விழாவில்
ஒரு தரை மேடையில் பாக்யராஜ் ஸ்டைலில் ஆடினார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்ட்ராபெரி பயிரிடும் விவசாயிகள்.
பர்ஸை காலியாக்க ரெங்கு ராட்டினம், பவுன்ஸ் வீடு போன்ற செட்டப்கள் இருந்தன. சொல்லி வைத்தார்ப்போல குழந்தைகள் அழுது புரண்டு காசை செலவு செய்தன.
ஃப்ரென்ச் ஃப்ரைஸ், கர்லி ஃப்ரைஸ், ஐஸ் ஃப்ரூட். , பரிட்டோ இன்ன பிற ஐட்டங்களை விற்றார்கள். ஏதோ ஒரு மூலையில் ஒரு சின்ன ஷாமியான போட்டு பிளாஸ்ட்டிக் பெட்டிகளில் ஸ்ட்ராபெரி விற்றார்கள்.
நாங்கள் ஒரு 50 டாலரை செலவு செய்துவிட்டு வந்தோம்.