அமெரிக்கர்களுக்கு அவசரம் எங்கு தேவை என்று தெரியாது. அடுத்த நாட்டின் மேல் படையெடுக்க மட்டும் தான் அவசரப்படுவார்கள். அவர்களது வாழ்கை முறையின் வேகம் மிக அதிகம். சாலைகளில் கார்கள், பெண்களின் நடை, ஃபாஸ்ட் ஃபுட், கூடைப்பந்து என்று பரபரப்பார்கள். ஓரு இடத்தைத் தவிர்த்து.
இரண்டு வாரமாக ஒரே வயிற்று வலி. 16 வருடங்களாக காலை உணவு அருந்துவதில்லை நான். மேலும் கடந்த இரு வருடங்களாகக் குடித்த சரக்கும் சேர்ந்து கிளப்பியது என்று நினைக்கிறேன். சரியென்று பக்கத்தில் இருக்கும் ஒரு அர்ஜன்ட் கேருக்குப் போனேன்.
அங்கு இன்முகம் காட்டிய front desk அம்மணி இன்சூரன்ஸ், கோ பே..( இதைப் பற்றி ஒரு விரிவான பதிவு பிறகு) இன்னபிற விஷயங்களுக்குப் பின், ஒரு சின்ன பிப்பெட்டும், ஒரு டம்ளரும் கொடுத்து, யூரின் டெஸ்டுக்குப் போகச்சொன்றார். 10 நிமிடத்திற்குப் பிறகு சர்ஜிகல் ஜெல் போன்ற ஒரு வஸ்துவை ஒரு பேப்பர் டம்ளரில் கொடுது குடிக்கச் சொன்ணார்.
அதற்கப்புறம் தான் கேம் ஆரம்பித்தது.
ஒரு நர்ஸ் வந்து நம்ம பீபி , பல்ஸ் போன்றவற்றை எடுப்பார். ஒரு சின்ன ரூமில் நம்மளை உட்கார/ படுக்கச் செய்து விட்டு டாக்டர் வருவார் என்று சொல்லிச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வந்தார். ஒரு பெரிய பாதிரியார் அங்கி மாதிரி ஒரு நீலக் கலர் அங்கியைக் கொடுத்து விட்டுச் சென்றார். 45 நிமிஷத்திற்கு அப்புறம், மற்றொரு டாக்டர் வந்தார்.
அவர் வயிற்றை லேசாகத் தொட்டு ப்பார்த்துவிட்டு X-Ray எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுபடியும் காத்திருத்தல்.
45 நிமிடம் கழித்து மரு படியும் ஒரு லேப் ஆள் வந்து ரத்தமும், பின்பு X-Ray எடுக்கவும் கூட்டிச்சென்றார். மரு படியும் அதே ரூமில் இருக்கச் செய்தார்கள். ஒரு மணி நேரம் கழிந்தது. ஒரு டாக்டார் வந்து, உனக்கு ஒன்றுமில்லை, Ranitidin நும் இன்னொறு மாத்திரையும் 30 நாலைக்குச் சாப்பிடு என்று சொல்லி ஃபார்மசியில் ஆர்டர் செய்துவிட்டேன் போய் வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டு என் பதில்லுக் காத்திராமல் சென்றுவிட்டார்.
ஒரு வயிற்று வலிக்காக கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்த்துதான் கடுப்பைக் கிளப்பியது. எங்க ஊரில் ராமகிருஷ்ணன் டாக்டரிடம் சென்றால், மெட்ரோஜில்லும் சர்ஜிகல் ஜெல்லும் கொடுத்து ரெண்டு நாள் புழுங்கல் அரிசி கஞ்சி குடி தம்பி சரியாகிவிடும் என்பார்.
ஒன்று மட்டும் புரியவில்லை.
அர்ஜன்ட் கேர் என்று எதற்காக இதற்குப் பெயர் வைத்தார்கள்?
0 comments:
Post a Comment