AA சில குறிப்புகள் - 09/15/2012
ஜனவரி மாசம் முழுவதும் இந்தியா வந்திருந்தேன். ஆறு மாதத்தில் பெரிய மாற்றம் இல்லை. சென்னை - திருச்சி ஹைவேயில் டோல் என்ற பெயரில் கொள்ளை அடித்தார்கள். அப்புறம் என்ன மயித்துக்கு சாலை வரி வாங்குறான்னு தெரியல.
குருவாயூரும் ஒரு திகில் கல்யாணமும்
மச்சினார் கல்யணம் குருவாயூரில் நடந்தது. முதல் நாள் புறப்படும்முன், சேட்டன்கள் பந்த் என்றார்கள். வாழையார் செக்போஸ்ட் போகும் முன் ஒரு தமினாடு போலீஸ்காரர், கேரளாவில் ஸ்ரைக் என்றார். வாழையாரில் ஒன்றும் இல்லை. என் மாமனாரும் மனைவியும் சேர்ந்து, பூதக்க் கண்ணாடி வைத்துப் பார்த்தால் தெரியுமாறு பக்கத்தில் இருந்த ஒரு சிஸ்டர் மூலன் மலையாளத்தில் குருவாயூருக்குக் கல்யாண்த்துக்குப் போகணும், கொரச்சு வழி விடணும் ஒரு சார்ட்ல் எழுதி வண்டியில் ஒட்ட வைத்திருந்தார்கள்.
வண்டி புறப்படும் போது ஒட்டுவதாக உத்தேசம். என்போன்ற சில பேர், தமிழ் நாட்டில் இதை ஒட்டினால், சேலம் அவுட்டரிலேயே அடிவாங்குவோம், வாழையாரி போய் பார்துக்கலாம் என்றோம். அதற்கு அவர்கள் கஷ்ட்டப்பட்டு எழுதிட்டோம், ஒட்டுவோம் என்றார்கள். சரி அடி உறுதி என்று கிளம்பினாம். நல்ல வேளை, கிளம்பிய பரபரப்பில் இந்த போஸ்ட்டர் மறக்கப்பட்டது.
எந்த பிரச்சனையும் இல்லாது குருவாயூர் சென்று வந்தோம். ஒரு சண்டையில் முதலில் அடிதான், அப்புறம் தான் போர்ட் எல்லாம் படிப்பார்கள். இதை எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
குருவாயூரில் சேட்டன்கள் சொஞ்சம் கடுப்பாகத்தான் பார்த்தார்கள்.
நட்பு என்பது ஒரு passing cloud போல
சில பேருக்கு முகராசி என்று ஒன்று இருக்கும். எனக்கு அது சுத்தமாக இல்லை. எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். என்னுடைய கஷ்ட்ட காலங்களில் கூடவே இருந்தவர். எப்போதும் ஒன்றாகவெ இருப்போம்.
என் திருமணத்திற்கு அவர் வரவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணமான 3 மாதங்கள் கழித்துத்தான் எனக்குத் தெரியவந்தது. ஒரு மெயில் மூலம் வாழ்த்தினேன். ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று கேட்டேன்?. அவர் சாரி மிஸ் பண்ணிடேன், உனக்கு மட்டும் தனியாக மெயில் அனுப்பலாம் என்று இருந்தேன் கடைசி நேர அவசரத்தில் மறந்துவிட்டேன் என்றார். எனக்கு என்னவோபோல இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
இந்த மாதிரி சென்டிமென்ட்டெல்லாம் தமிழ் சினிமாவில் தான் சாத்தியம்.
சில சமயங்களில் நட்பு என்பது ஒரு passing cloud போல....காலம் இதை வெவ்வேறு தருணங்களில் எனக்கு உணத்தியுள்ளது.