டெசோ

தலைவர் மறுபடியும் தமிழ் ஈழம் குறித்து ஆரம்பித்து விட்டார். டெசோவை பற்றி மீண்டும் ஆரம்பித்து விட்டார். அவருக்கு காங்கிரஸ்சை கழற்றிவிடும் நேரம் வந்துவிட்டது. இனிமேல் வி.பி. சிங். சமுகநீதி யென்று தினம் ஒரு அறிக்கை வரும். வரவர சிரிப்பு போலீஸ் மாதிரி ஆகிட்டார். ஒரு மனிதனுக்கு நல்ல ஞாபக சக்தியும், வாயும் இருந்தால் போதும், ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிடமுடியும் அதற்கு கனா ருனா ஒரு வாழும் உதாரணம்.

சீமான், வைகோ போன்றவர்கள் சொல்லாததை நான் சொல்லவில்லை. ஈழம் பற்றியெறியும் போது பிடில் வாசித்துவிட்டு இப்போது அறிக்கைவிட்டு என்ன பயன்?

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா

மாண்பு மிகு காங்ரஸ் எம்.பி டெண்டுல்கருக்கு பாரத ரத்னா குடுக்க வேண்டும். பி சி சி ஐ என்ற ஒரு தனியார் நிறுவனத்திற்கு சிறந்த முறையில் வேலை பார்த்ததனால், அவருக்கு கட்டாயம் கொடுத்தே தீரவேண்டும். என்ன ஐ டி துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய நாரயணமூர்த்தி அல்லது பிரேம்ஜி போன்றவர்களுக்கு முதலில் கொடுத்து விட்டு அப்புரமா நம்ம எம் பி க்கு கொடுங்கள்.

நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

திருவண்ணாமலை: ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம்.
அடடா, என்ன ஒரு பேச்சு.இவனெல்லாம் ஓரு துறவி. விட்டா நித்திதான் சிவபெருமான், ரஞ்சி தான் பார்வதின்னு சொல்லுவான் போல. தமிழர்களின் நேரம் இதையயெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.


மலையேற்றம்

சியாட்டிலைச் சுற்றி நிறைய மலைகள் உள்ளன. சம்மரில் நண்பர்களுடன் மலையேற்றம் என்பது ஒரு தவ‌ம் போல. பசுமையான மலைப் பாதைகள், உயர்ந்த மரங்கள், சில சமயம் நாக்குத் தள்ளிவிடும். ஆனால், மலை உச்சிக்குச் சென்றவுடன் ஒருவித பரவச நிலையை அடையலாம்.

சென்னையில் இருக்கும் போது, பரங்மலையில் எறலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால், ஊரில், வாத்தியார் மகனுக்கு கிறுக்குப் புடிச்சிருச்சு, மொட்ட வெயில்ல பரங்கிமலையில ஏறானாம் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயத்திலேயே அதை பல முறை தவிர்த்து இருக்கிறேன்.


1 comments:

TESO is a complete Joke it should be called "Tamil Eelam Screwing Organization " and not "Tamil Eelam Supporters Organization ".

Giving Rajya Shaba MP to sachin is not a bad thing... but I want to see how it shapes his career after he retires...

No comments abt Nithyananda...

Cheers
Naveen

Post a Comment