சார் தந்தி......

அடிவயிற்றில் அட்ரீனலின் தன்னாலே ஊரும்..  என்றால்.. சில சமயங்களில், என்னவென்று கேட்காமலேயே அழுது ஒப்பாரி வைத்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

போலீஸ் வந்தாலும் பயப்படாதவர்கள், தந்தியென்றால் நடுங்கிய காலமும் இருந்தது..

எத்தனையோ பேருக்கு வேலை, எத்தனை குழந்தை பிறப்பு, சாவு என்று இந்தியாவின் கிராமங்களுக்கெல்லாம் செய்தி சொன்ன தந்தி சேவை ஜூலை 15ஆன் தேதியுடன் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளப் போகிறது.


சார் தந்தி என்ற இரண்டு வார்த்தைகள் கொடுத்த பயம் இனி எந்த வார்த்தையும் கொடுக்குமா என்று தெரியவில்லை.. may be Vijai  படம் என்ற வார்த்தைகள் கொடுக்கலாம்.

போன நூற்றாண்டின் இறுதியில் விடலை பருவம் அடைந்தவராக இருந்தால், நீங்கள் தந்தியை ஒரு முறை பார்த்திருக்க வாய்ப்புண்டு.


ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துங்கள்,  நீங்கள் பிறந்த செய்தி தந்தி வழியாக சொல்லப்பட்டோ, வேலை கிடைத்த செய்தி த்ந்தி மூலம் வந்திருந்தாலோ..

18ம் நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்பு..

RIP த‌ந்தி

0 comments:

Post a Comment