ஜனாதிபதி தேர்தல்

நம்ம இளாங்கோவன் அவர்கள் வழக்கம் போல ஒரு கமெண்ட் அடித்துள்ளார்.

அப்துல் கலாம் ஏற்கனவே 5 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு தனக்கு பதவி ஆசை இருப்பதை காட்டினால் அவரது அந்தஸ்து, மரியாதை போய்விடும். தேர்தலில் போட்டியிடுவதை விட்டுவிட்டு அவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும். அவர் குதிரை பூட்டிய சாரட்டில் செல்ல இனியும் ஆசைப்படக் கூடாது.

அப்போ நீ என்ன --- க்கு மறுபடியும் தேர்தலில் நின்ன? மன்மோகன் சிங் எதுக்கு நீன்னார்? கலாம் ஆராய்ச்சியில் ஈடு படட்டும். காங்கிரஸ் நாட்டை சுரண்டட்டும்.

பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொள்ளும் இவர், ச‌ங்மாவை யானை வாரியத்தலைவராகச் செயியலாம் என்று சொல்கிறார். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த பிராமணீயத்தை எதிர்த்தார். இவர் அவர்களின் அடிவருடி பதவி  வாங்க நினைக்கிறார்.

கலாமைப் பற்றை பேச உனக்கு எந்தத் தகுதியும் இல்லை.

டெசோ

டெசோ மாநாட்டுக்கு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களை அழைக்கும் திமுக!

இனி யாருக்காக இந்த மாநாடு தலைவரே? தலைவர் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னேரம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்.

சீமான்

சீமான் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்...

கல்யாணம் சீரும் காளையையும் சூப்பு போட்டு குடித்து விடும். உங்கள் நம்பகத்தன்மை போய்விடும். கேப்டன் குடும்பம், த‌லைவர் குடும்பம் போல உங்களது குடும்பமும் கட்சியை கூறு போடும்.

தமிழ் ஈழம், தமிழ என்று இனிமேல் ஜ‌ல்லி அடிக்க முடியாது, தலைவரும் அவரது கட்சியும், தமிழ் குடிதாங்கி நம்ம மருத்துவரும் ஏற்கனவே துண்டுபோட்டு போணி பண்ணிட்டாங்க.. மக்களும் முழிச்சுகிட்டாங்கள். ஆமா உன் படத்துக்கு கதாநாயகி எந்த ஊரு? ஒண்ணு சிலோன், இன்னோன்னு கேரளா... நீ பேசாத.....

கலைஞரை தூத்தும் நீ மட்டும் என்ன புடுங்கின? முதல் அமைச்சர் பதவிங்கிறது ஒரு முள் கிரீடம். அவர் மட்டுமல்ல நீயே அந்த பதவீல இருந்திருந்தாலும் ஒரு ----- புடுங்கீருக்க முடியாது. அவர் ஆண்டவரை நன்றாகத்தான் ஆண்டார்.


டெசோ

தலைவர் மறுபடியும் தமிழ் ஈழம் குறித்து ஆரம்பித்து விட்டார். டெசோவை பற்றி மீண்டும் ஆரம்பித்து விட்டார். அவருக்கு காங்கிரஸ்சை கழற்றிவிடும் நேரம் வந்துவிட்டது. இனிமேல் வி.பி. சிங். சமுகநீதி யென்று தினம் ஒரு அறிக்கை வரும். வரவர சிரிப்பு போலீஸ் மாதிரி ஆகிட்டார். ஒரு மனிதனுக்கு நல்ல ஞாபக சக்தியும், வாயும் இருந்தால் போதும், ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிடமுடியும் அதற்கு கனா ருனா ஒரு வாழும் உதாரணம்.

சீமான், வைகோ போன்றவர்கள் சொல்லாததை நான் சொல்லவில்லை. ஈழம் பற்றியெறியும் போது பிடில் வாசித்துவிட்டு இப்போது அறிக்கைவிட்டு என்ன பயன்?

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா

மாண்பு மிகு காங்ரஸ் எம்.பி டெண்டுல்கருக்கு பாரத ரத்னா குடுக்க வேண்டும். பி சி சி ஐ என்ற ஒரு தனியார் நிறுவனத்திற்கு சிறந்த முறையில் வேலை பார்த்ததனால், அவருக்கு கட்டாயம் கொடுத்தே தீரவேண்டும். என்ன ஐ டி துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய நாரயணமூர்த்தி அல்லது பிரேம்ஜி போன்றவர்களுக்கு முதலில் கொடுத்து விட்டு அப்புரமா நம்ம எம் பி க்கு கொடுங்கள்.

நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

திருவண்ணாமலை: ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம்.
அடடா, என்ன ஒரு பேச்சு.இவனெல்லாம் ஓரு துறவி. விட்டா நித்திதான் சிவபெருமான், ரஞ்சி தான் பார்வதின்னு சொல்லுவான் போல. தமிழர்களின் நேரம் இதையயெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.


மலையேற்றம்

சியாட்டிலைச் சுற்றி நிறைய மலைகள் உள்ளன. சம்மரில் நண்பர்களுடன் மலையேற்றம் என்பது ஒரு தவ‌ம் போல. பசுமையான மலைப் பாதைகள், உயர்ந்த மரங்கள், சில சமயம் நாக்குத் தள்ளிவிடும். ஆனால், மலை உச்சிக்குச் சென்றவுடன் ஒருவித பரவச நிலையை அடையலாம்.

சென்னையில் இருக்கும் போது, பரங்மலையில் எறலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால், ஊரில், வாத்தியார் மகனுக்கு கிறுக்குப் புடிச்சிருச்சு, மொட்ட வெயில்ல பரங்கிமலையில ஏறானாம் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயத்திலேயே அதை பல முறை தவிர்த்து இருக்கிறேன்.





பணம் பத்தும் செய்யும்

வெள்ளைக்காரர்கள் நம்ம நாட்டை விட்டு வெளியேபோன போது இரண்டு விஷயத்தை விதைத்து விட்டுப் போனார்கள். ஒன்று காஷ்மீர் பிரச்சனை மட்டொன்று கிரிக்கெட்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநில கிரிக்கெட் சங்கத்திலும் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தைப்பார்தாலே எவ்வளவு பணம் விளையாடுகிறது என்பது தெரியும். அதிலும் IPL என்று ஒன்று. மக்களை அடிமைப்படுத்த வ‌ந்திருக்கும் அடுத்த ஆயுதம். நமக்கு எதிரி பாக்கிஸ்தானோ, சீனாவோ இல்லை, கிரிக்கெட்டும் சினிமாவும் தான்.

தமிழ்நாடு முழுவதும் கரண்ட் கட். IPL க்கு மட்டும் எப்படி கரண்ட் தவறாமல் தடங்கல் இல்லாமல் வருகிறது எப்படியென்று  தெரியவில்லை.விவசாயத்திற்கு , தொழிற்சாலைகளுக்கு இல்லாத இல்லாத கரண்ட் இதற்கு மட்டும் எப்படி வருகிறது என்று தெரியவில்லை.

சியாச்சினிலிருந்து படைகள் வெளியெற்றம்

12 வருடத்திற்கு முன்னால் வாஜ்பாய் கராச்சிக்கு பஸ்விட்டு, பால் சாப்பிட்டு பல்பு வாங்கினார்.எனக்கு என்னவோ, சர்தாரி சரவெடி கொளுத்தப்போராரோன்னு தோணுது. இதையெல்லாம் யோசிக்கும் மன நிலையில் நம்ம பிரதமர் இல்லை. அவருக்கு அவர் நாற்காலியைக் காப்பாதிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நாற்காலி பத்திரங்கண்ணாவ்...

கிழ்வரும் பாடல் ஒரு பாகிஸ்தான் படப்பாடல். மூலம் 35 அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு ஈரானிய படமோ ஆல்பமோ. எண்பதுகளின் மத்தியில் கலக்கிய பாடல். காப்பி எல்லா இடத்திலும் உண்டு.



கமிஷனர் அலுவலகத்தில் எஸ்ஏசி மனு - 'எங்களை நீக்கியது செல்லாது'!

ஓத்தா இவங்க தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. போலீசுக்கும் அரசுக்கும் வேறு வேலைகள் உண்டு. மற்ற சங்கங்களைப் போலத்தான் இவர்களும். அரசின் தலையீடு ஓர் அளவிற்கு மேல் இருக்கக் கூடாது. 













ச‌ங்கரன் கோயில் இடைத்தேர்தல்

பென்னாகரத்தை மனதில் கொண்டால் சங்கரன்கோவில் குறித்து வருந்தத் தேவையில்லை-கருணாநிதி

இவரு என்ன சொல்ல வராரு... இப்படி அப்பட்டமா ஒத்துக்கக்கூடாது தலீவா..

ஆரண்ய காண்டம்

கடந்த ஆறு மாத‌ங்களாகவே இந்தப்படத்தின் சீடியைத்தேடி அலைந்தேன். சமீபத்தில் ஆன் லைனில் 8 டாலர் குடுத்துப் பார்த்தேன். வித்யாசமான எடிடிங், இசை, வசனம், கோணம் என்று ஒரு கேங்ஸ்டரின் கதையை சொன்ன விதம் உலகத்தரம். காட் ஃபாதர், ச்சாங் ரிடம்ஷனுக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்ப்தி அதிலும் அந்தச் சிறுவன் கொடுக்கா புள்ளியின் வசனங்கள்..கட்ன பொண்டாட்டியயே காப்பாத்த முடியல, நீ எப்படி எங்கப்பாவ காப்பாத்துவ மயிறு..கலோக்கியல்...

திருட்டு வீசிடில கூட வாங்கமுடியல அப்புறமா உலக சினிமா பற்றி பேச்சு என்ன,,, மயிறு... தமிழர்கள் ரஜினி, விஜயிலிருந்து வெளிவர வேண்டும்.

தயாரித்த சரணுக்கு நன்றி. அப்படியே ஒரு காப்பி சீடி இருந்தால் தாங்க. கண்டிப்பா பணம் தரேன். நல்ல படத்தை திருட்டு சீடீயில் பார்க்க மனம் வரவில்லை.



AA சில குறிப்புகள் - 09/15/2012

ஜனவரி மாசம் முழுவதும் இந்தியா வந்திருந்தேன். ஆறு மாதத்தில் பெரிய மாற்றம் இல்லை. சென்னை - திருச்சி ஹைவேயில் டோல் என்ற பெயரில் கொள்ளை அடித்தார்கள். அப்புறம் என்ன மயித்துக்கு சாலை வரி வாங்குறான்னு தெரியல.

குருவாயூரும் ஒரு திகில் கல்யாணமும்

மச்சினார் கல்யணம் குருவாயூரில் ந‌டந்தது. முதல் நாள் புறப்படும்முன், சேட்டன்கள் பந்த் என்றார்கள். வாழையார் செக்போஸ்ட் போகும் முன் ஒரு தமினாடு போலீஸ்காரர், கேரளாவில் ஸ்ரைக் என்றார். வாழையாரில் ஒன்றும் இல்லை. என் மாமனாரும் மனைவியும் சேர்ந்து, பூதக்க் கண்ணாடி வைத்துப் பார்த்தால் தெரியுமாறு பக்கத்தில் இருந்த ஒரு சிஸ்டர் மூலன் மலையாளத்தில் குருவாயூருக்குக் கல்யாண்த்துக்குப் போகணும், கொரச்சு வழி விடணும் ஒரு சார்ட்ல் எழுதி வண்டியில் ஒட்ட வைத்திருந்தார்கள்.

வண்டி புறப்படும் போது ஒட்டுவதாக உத்தேசம். என்போன்ற சில பேர், தமிழ் நாட்டில் இதை ஒட்டினால், சேலம் அவுட்டரிலேயே அடிவாங்குவோம், வாழையாரி போய் பார்துக்கலாம் என்றோம். அதற்கு அவர்கள் கஷ்ட்டப்பட்டு எழுதிட்டோம், ஒட்டுவோம் என்றார்கள். சரி அடி உறுதி என்று கிளம்பினாம். நல்ல வேளை, கிளம்பிய பரபரப்பில் இந்த போஸ்ட்டர் மறக்கப்பட்டது.

எந்த பிரச்சனையும் இல்லாது குருவாயூர் சென்று வந்தோம். ஒரு சண்டையில் முதலில் அடிதான், அப்புறம் தான் போர்ட் எல்லாம் படிப்பார்கள். இதை எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

குருவாயூரில் சேட்டன்கள் சொஞ்சம் கடுப்பாகத்தான் பார்த்தார்கள்.


நட்பு என்பது ஒரு passing cloud போல‌

சில பேருக்கு முகராசி என்று ஒன்று இருக்கும். எனக்கு அது சுத்தமாக இல்லை. எனக்கு மிகவும் நெருங்கிய நண்ப‌ர் ஒருவர் இருந்தார்.  என்னுடைய கஷ்ட்ட காலங்களில் கூடவே இருந்தவர். எப்போதும் ஒன்றாகவெ இருப்போம்.
என் திருமணத்திற்கு அவர் வரவில்லை.  அவருக்கு சமீபத்தில் திருமணமானது.  திருமணமான 3 மாதங்கள் கழித்துத்தான் என‌க்குத் தெரியவந்தது. ஒரு மெயில் மூலம் வாழ்த்தினேன். ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று கேட்டேன்?. அவர் சாரி மிஸ் பண்ணிடேன், உனக்கு மட்டும் தனியாக மெயில் அனுப்பலாம் என்று இருந்தேன் கடைசி நேர அவசரத்தில் மறந்துவிட்டேன் என்றார். எனக்கு என்னவோபோல இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

இந்த மாதிரி சென்டிமென்ட்டெல்லாம் தமிழ் சினிமாவில் தான் சாத்தியம்.

சில சமயங்களில் நட்பு என்பது ஒரு passing cloud போல....காலம் இதை வெவ்வேறு த‌ருணங்களில் எனக்கு உணத்தியுள்ளது.