எனக்கு சிவப்பு விளக்கைப் பார்த்தாலே ஒரு வித பதட்டம் வந்துவிடும். சின்ன வயதிலிருந்தே சொல்லப்பட்ட அல்லது படித்து தெரிந்துகொண்ட சிவப்பு விளக்கு பற்றிய எச்சரிக்கை, சிவப்பு விளக்கை பார்க்கும்போதெல்லாம், அடி வயிறில் லேசாக அட்ரினலின் ஊறும். ஒரு மெல்லிய பதட்டம் வரும்.
தினசரி பேப்பரைப் பார்த்தால், சின்ன பத்தியில் செய்திகள் இருக்கும். யாரவது ஒருவர் வாழ்கையை தொலைத்தார் என்று.
சிவப்பு ஒரு நல்ல கலர். ஆனால், சமூகம் அதை எச்சரிக்கைக்கு அதிகமாக பயன்படுத்துகிறது.
கொஞ்சம் வயதான பின்பு, சிவப்பு ஒரு அட்ராக்டிவ் கலர் என்ற நினைப்பு வந்தது. சிவப்பு ஒரு எச்சரிக்கை என்பதை ஏன் மீறக்கூடாது என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால், இந்த சிவப்பு விளக்கு இப்போது தெருவிற்குத் தெரு வந்து விட்டது.
வயதுக் கோளாறு வேறு.
அழகான பெண்கள், சிவப்பு விளக்குக்கு அருகில் நிற்கும்போது, மனது சஞ்சலபடும். சற்று நேரம் நின்று யோசித்தாலும், விளக்கிற்கு கீழே நிற்கும் மாமாவைப் பார்த்தால், லேசாக பயம் வரும். எனக்கு விபரம் தெரிந்த நாட்களிலிருந்து,
மாமாக்களுக்கு பெரிய தொப்பையும், மீசையும் உண்டு.
அதோடு அவர்கள் விடும் மிரட்டலுக்காகவும், அவர்களது குரலும், சிலநேரங்களில் அடாவடித்தனமும்........ எத்தனையோ முறை சிவப்பு விளக்கிற்கு முன்னால் நின்றுவிட்டு, கொஞ்சம் நேரம் யோசித்துச் சென்றதுண்டு.
ஒரு நாள் எதோ அவசரத்தில் சிவப்பு விளக்கு எச்சரிக்கையையும் மீறிச் சென்றபோது அங்கே நின்ற மாமா என் பைக்கை மறித்து சாவியை பிடுங்கிக் கொண்டார். அப்புறம் அங்கிருந்த பெரிய மாமாவைப் பார்த்து கப்பம் கட்டி விட்டு வருவதற்குள், நாக்கு தள்ளிவிட்டது.
நான் சொல்லும் சிவப்பு விளக்கு தெருவிற்குத் தெரு இருக்கும் ட்ராஃபிக் லைட். நீங்கலள் வேரு ஏதாவதை நினைத்துக் கொண்டால் அதற்கு அட்டியேன் பொறுப்பு இல்லை.
ஆனாலும் சிவப்பு என்றால்.... எச்சரிக்கை தான்.. ரோட்டில் மட்டுமல்ல.....