நான் வசிக்கும் இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கிருத்துவப் பள்ளி உள்ள‌து. என் மகள் அங்குதான் படிக்கிறாள். அதனுடன் சின்ன ச‌ர்ச்சும் உள்ளது. மிக அருமையான சூழல். கடந்த பிப்ரவரி மாதம்,  அந்த சர்ச்சை சேர்ந்த சில இந்தியர்கள், நம்ம குடியரசு தினத்தை கொண்டாடினார்கள். நாங்களும் சென்றோம்.

நல்ல வரவேற்பு. கனிவான உபசரிப்பு. நிகழ்ச்சி 4 மணிக்கு என்றார்கள். 5.10 க்கு ஆரம்பித்தார்கள். நான்கைந்து வெள்ளைக்கார‌ர்களும் அங்கே இருந்தனர்.  அந்த ஆடிடோரிய சுவர் முழுவதும் எழை இந்தியர்கள் போட்டோக்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இடையிடையே, தாஜ்மஹால், கேரள அரண்மனை ஒவியங்களும் இருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பித்த போது, ஒரு அமெரிக்கர் இந்தியா பற்றி உருகி பேசினார். அவர் கொல்கொத்தாவில் செய்த சேவைகள் இன்னபிற‌ விஷயங்களை சொன்னார்.  சரி கொடி எற்றுவார்கள் என்று நாங்கள் காத்து இருந்தோம்.

கொஞ்ச நேரத்தில், இப்போது கொடி எற்றப்படும் என்று மைக்கில் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.

ஒரு சின்ன் கம்பில், ஒரு இந்தியக் கொடியை கட்டி ஒரு ஆள் எடுத்து வந்தான். உடனே, AR. ரஹ்மானின், மாற்றப்பட்ட இந்திய தேசிய  கீதத்தை பெரிய திரையில் காட்டினார்கள்.

நாங்கள் அதிர்ந்து போனோம். சின்ன வயதிலிருந்தே, இந்திய அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய கீதத்தைக் கேட்டுவிட்டு இதை கேட்க, சற்று வித்தியாசமாக இருந்தது. நான், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் நீங்கள் செய்வது சரியான முறை இல்லை. அரசால் அனுமதிக்கப்பட்ட ஒலிநாடாவை இனிமேல் பயன் படுத்துங்கள் என்று சொன்னேன். அவர் எங்களுக்கு அது தெரியாது. அடுத்த முறை சரிசெய்கிறோம் என்றார்கள்.

என்னால் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

கொஞ்ச நாள் வெளிநாட்டில் வாழ்வதால், நமது சட்டதிட்டங்கள் மறந்துவிடுமா?  நமது அடுத்த தலைமுறை மக்கள், இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்தவர் யார் என்றால், ரஹ்மான் என்பார்கள். ஏற்கனவே, கே.டி குஞ்சுமோனை பாரதியாரென்று தமிழ் சினிமா சொல்லிக் கெடுத்துவிட்டது.

இந்தியா என்றால், பிச்சைகாரர்கள் நாடு என்பது எப்போது மாறும்? ஏன் நம்மைப் பற்றிமட்டும் இந்த நிலை இன்னும் உள்ளது? நம்முடைய நிலையை சினிமாகாரன் பாதி அசிங்கப்படுத்தினால், மீதியை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்கின்றார்கள். ந்மது அரசுகளும் நம்மை கையேந்தவைப்பதில் குறியாக உள்ளது.

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது போல, நாம் ஆள‌வும் அடிமைப்படுத்தவும் படைக்கப்பட்ட ஒரு நாடு தான் இந்தியா.

அந்த நாம் என்பது யார் என்பதுதான் இப்போது மாறியுள்ளது.

ஆள‌வும் அடிமைப்படுத்தவும் ஏழைகள் தேவைப்படுகிறார்கள்.

பாதி நிகழ்ச்சியுடன் நான் கழண்டுகொள்ள, அங்கு இருந்த ஒரு பெண் ஒரு பைபிளைக் கொடுத்து அவர்தம் கொள்கையை சொல்ல ஆர்ம்பித்தார்.

விடு ஜூட்........ எனக்கு எந்த சித்தாந்தத்திலும் நம்பிக்கை இல்லை.

புள்ளி ராஜா புள்ளி விபரம்:  அமெரிக்காவில் ஒரு வருடத்தில் தயாராகும் பிளாஸ்டிக் தண்ணி பாட்டில்களைக் கொண்டு உலகை 160 தபா சுத்தி கட்டலாமாம். மெய்யாலுமே, குடிதண்ணிதாம்பா.


0 comments:

Post a Comment