ஏழெட்டு வருடங்களுக்கு முன்னாடி கோவையில் வேலை பார்த்க்கொண்டிருந்தோம். நாங்க 3 காலேஜ் நண்பர்கள் இன்னோரு நண்பர்.  சனிக்கிழமை ஆனா,  மாலை காந்திபுரம் அருகே இருக்கும் அடையார் ஆனந்தபவனில் சாப்பிட நாங்களும் வாரம் தவராது போவோம்.


நம்ம காலேஜ் நண்பர் வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்கள். கிட்டத்தட்ட அதுக்கு 16 வயசு இருக்கும். அதுக்கு சொத்துல பங்கு தரும் அள‌வுக்கு அந்த நாய் மேல பாசம். வராவாரம் நம்ம நண்ப‌னும் நாய்க்கு ரஸகுல்லா வாங்கிட்டுப்போவான். அவன் வேலைக்கு வந்த புதிதில் முதல் சம்பளத்தில் நாய்க்கு பெல்ட் வாங்கிக் கொடுத்தான். அவ்வளவு பாசம்.


அந்த நாயி நம்ம நண்பன் கல்யாணத்த பாக்காம டிக்கெட் வாங்கிடப்போகுதுன்னு நண்பனோட அப்பாவுக்கு ஒரே கவலை.
அது வரவர வீக்காகுதுன்னு புல‌ம்புவார். ஒரு வெட்னரி டாக்டர் வந்து பார்த்து விட்டு, சார், நாய்க்கு இதயம் பலவீனமாக இருக்கு, பையன் கல்யாணத்தைப்பத்தி நாய் முன்னாடி பேசாதிங்கன்னு சொல்லிட்டுப் போனார். 


ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல நாங்க அடயார் ஆன‌ந்த பவனில் இருந்தோம். நம்ம நண்பருக்கு அவர் தம்பி கால் செய்து, டேய், நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டார்டா என்றான். நண்பரும் அப்டியாடான்னு சொல்லிட்டு, ஒரு ரசகுல்லா வாங்கி சாப்பிட்டுவிட்டு, எங்களோடு படம் பார்க்க வந்த்தார், அப்புறமா லேட் நைட் கிளம்பிப்போனார்.


இது நடந்து இரண்டு மாதத்திற்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நாங்க ஒரு டீ கடையில் நின்று கொன்டிருந்தோம். நம்ம நண்பருக்கு அவர் தம்பி போன் செய்து, டே நம்ம தங்கம் போய்ட்டாண்டானு கததினான், கையில் இருந்த டீ கிளாஸ் மேலே பறக்க நம்ம நண்பர், சிவனந்தா காலணி பஸ் ஸ்டாப்ல உருண்டு புரண்டு அழுதார். உடனே பஸ் புடிச்சுப் போனவர், மூன்று நாள் கழித்து கண்கள் சிவந்து சோகமாக வந்தார். 


அவரது அப்பா,  கடந்த ஏழு வருடங்களாக, தங்கத்திற்கு நினைவு நாள் அனுசரிக்கிறார். 


சமீபதில் அவரது திருமணத்திற்காக அவர் வீட்டிற்குச் சென்றபோது.. தங்கம் அவர் வீட்டு ஹாலில், சீரியல் செட் போடப்பட்ட பெரிய படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. 


என்னால் சில மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.... 

2 comments:

Spent some time on your blog and able to recall some of the golden moments :-)

Senthil Kuamr.

Glad I triggered some nostalgic moments.

Post a Comment