எங்க அம்மா எனக்கு ஒரு சாபம் கொடுத்திருக்காங்க.. நீ கை நிறைய சம்பாதிப ஆனா வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்காது. ஏன்னா அவ்வளவு அட்டூழியம் செஞ்சுருக்கேன்.
அம்மா சமையல் எப்போதும் நல்லா இருக்கும் சும்மா வம்பிழுக்க நாங்க எப்போதும் குறை சொல்வோம்.
ஒரு நாள் கல்யாணம் ஆன பொழுதில் என்னையும் என் மனைவியையும் சென்னையில் விட்டு விட்டு என் பெற்றோர் என் சொந்த ஊருக்குப் போய்ட்டாங்க. எனக்கு ரெண்டு நாளாக ஒரே ஜுரம். என் மனைவியோ அன்னைக்குதான் மொத தபா ரசம் வைக்கவா கணவரே என்றாள். அவள் என்னை அப்படித்தான் கூப்ப்டுவாள். நானும் ஜுர வேகத்தில் சரிம்மா என்றேன். வெச்சத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது அது ரசம் இல்லை விஷம் என்று.
நீதி : அரசன் அன்று கொல்வான். மனைவி ரசம் வைத்துக் கொல்வாள்.
விதி அப்படியெ விட்டுச்சான்னா இல்லை...
அன்று மாலை நண்பர் ஒருவர், மைலாப்பூர் ஷாப்பிங் போலாமாடான்னு கேட்டார், சரின்னு குடும்பத்தோடு எல்லோரும் போனோம். ஷாப்பிங் முடிந்து பக்கதுல இருந்த சரவண பவன்ல சாப்பிடப்போனோம். நண்பரின் மனைவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர், அதனால் அவர் எனக்கு full meals-னு முடித்து விட்டார்.
ஆனா நாங்க காட்டுப்பக்கதுல இருந்து வந்தவங்க, கொலபசிவேற, அதனால மெனுல 7 ஸ்டார் ஊத்தப்பம்னு ஒர் ஐட்டம் இருந்துச்சு, 50 அல்லது 60 ருவா இருக்கும். கிராமத்துல, 10 ருவா தோசையே நல்லா பெருசா கிளின்ட் ஈஸ்ட்வுட் தொப்பி சைசுக்கு இருக்கும். சரி ஒரே கல்லுல 7 மாங்கானு நெனைச்சுகிட்டு 7 ஸ்டார் ஊத்தப்பம் ஆர்டர் பண்ணினேன்.
சரவணபவன்ல 5 சர்வர்ருக்கு 15 சூப்ரவைசர் இருக்காங்க. தண்ணியே 20 நிமிஷத்துக்கப்புறமா தான் வந்துச்சு. எல்லாரும் பரபரன்னு இருந்தாங்க, ஆனா ஒண்ணும் நகரல (இவங்கக்கிட்ட தான் கத்துக்கனும்). 35 நிமிஷத்துக்கு அப்புறம், நம்ம 7 ஸ்டார் ஊத்தப்பம் வந்துச்சு. முக்காவாசி தபா நம்ம Appraisal paper மாதிரி எக்ஸ்பெக்டேஷன் ஆனா. ..த்தா 7 பழைய ஒரு ரூபா காசு சைசுக்கு ஊத்தப்பம் அது மேல காக்கா எச்சம் மாதிரி கொஞ்சம் சட்னி,
ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ண நண்பர் மனைவி.. நான் ஸ்டாப்பா சிரிச்சாங்க.. சில சமயம் சுற்றத்தைப் பார்த்துவிட்டு சாப்பிட்டால் தப்பே இல்லை.
அப்புறம் வெளிய வந்து, கையேந்தி பவன்ல ஃபுல் கட்டு கட்டினேன்.
என்னவோ எனக்கும் சரவணபவனுக்கும் இதுவரை செட் ஆகவே இல்லை. ஒரே ஒரு முறை கனடாவின் வான்கூவர் நகரில் மட்டும் கொஞ்சம் சுமாரா இருந்தது. அதுவும் பொண்டாட்டி சமயல ஒரு வருஷம் சாப்பிட்டுவிட்டு அங்கே போனதால....
எங்கம்மா நெஜமாவே சாபம் கொடுத்திருக்காங்க...
1 comments:
Not only saravana "Bhavan".. All "Bhavan" s are like that only :) Title is good.
Post a Comment