அப்பாடா பொன்னியின் செல்வன் தப்பித்தது
நண்பர் ஒருவர் போன் செய்து மச்சான், பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆயிடுச்சுன்னு சொன்னார். மூணு வாரமா சரிய தூங்கல. அதுவும் பொன்னியின் செல்வன் கதையை பலதடவை படிச்சு வந்தியத்தேவனுடன் அரிசிலாற்றங்கரையில் நடந்து... நாடி நரம்பெல்லாம் அருள்மொழிவர்மனும் ஆதித்ய கரிகாலனும் கலந்து விட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்தது. அதுவும் நம்ம மணிரத்னம் இயக்கத்தில். அப்பா... கண்ண கட்டுதே...
மணி ஒரு காலத்தில் நல்ல இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரால் பொன்னியின் செல்வனை எடுக்க முடியுமா?
ஒரு சின்ன உதாரணம்:
பொன்னியின் செல்வன், பாகம் 4 ல் ஆதித்ய கரிகாலன் கடம்பூர் அரண்மனை விஜயத்தின்போது, வாயிற்காவலன் கட்டியம் கூறுவதை கல்கி ஒரு பெரிய பத்தியில் வர்ணித்திருப்பார். அது இதுவரை தமிழில் எழுதப்பட்டுள்ள
உரைநடைகளில் மிகச்சிறந்தது. அதற்கு இணையே இல்லை.
இதை மணி எடுத்தால், கற்பனைசெய்து பாருங்கள்,
கட்டியங் கூறுபவன்: அவுஹ வந்துருக்காஹ..
கடம்பூர் சம்புவரையர்: யாரு
கட்டியங் கூறுபவன்: ஆதி
கடம்பூர் சம்புவரையர்: சரி வரச்சொல்லு
சினிமா ஒரு visual mediam. சில கற்பனைகளை அதன்மூலம் வடிவமைக்க முடியாது. அதுவும், மணிக்கு நெல்லை தமிழ் மேல் ஒரு தனி காதல். நினைத்துப்பாருங்கள், அருண்மொழி வர்மன் நெல்லைத் தமிழ் பேசினால் எப்படி இருக்கும். கேக்கவே சகிக்கலதானே?
நம்ம டாகுடரு வந்தியத்தேவனா.. கொமட்டிகிட்டு வருதா? வானதி ஒரு அழகான பெண், நம்ம மணி, பம்பாய் படத்துல மண்ஷா கொய்ராலா ஓடி வருவது போல ஒரு சீன் வைப்பாரு. உடனே, நம்ம தமிழ் குடி தாங்கி டெல்லில ஹிந்தி படிக்கும் அவர் பேரன் முதல் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு போராட்டம் நடத்துவாரு.
நம்ம ஆஸ்கர் நாயகன் இசையில் வெட்டி வெட்டி நாலு பாட்டு இருக்கும். நம்ம மணி சம்சாரம், ஒரு அறிவு ஜீவி. அது வசனம் வேற எழுதும். இப்போதுள்ள நடிகர்களிள், யாரும் பாதிதிரத்தோடு ஒன்றமாட்டர்கள். ஸில சமயங்களிள், சில கதைகளை, வாசகர் கற்பனைக்கே விட்டுவிடுவது நல்லது.
பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது உண்மையானால், தழ்கூறும் நல்லுலகம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது. இந்த நூற்றாண்டின் ஈடுயிணையற்ற செய்தி இது.
மணி அவர்களே, உங்களுக்கென்ட்று ஒரு களம் உள்ளது. தயவஉ செய்து, இதை விட்டு விடவும்.
இந்த செய்தி வந்தவுடன் ஒரு Black Swan ஃப்புல் ஒய்ன் வாங்கி அடிச்சேன். அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.
3 comments:
Black Swan ....over to Alangudy!
எனக்கு மணி படம் எடுக்கறது கூட கடுப்பா இல்ல...
ஆனால் டாக்டர் இளைய தளபதின்னு கேட்டவுடனே ஸ்ட்ரோக் வந்திடிச்சி
~தல தளபதி
ஹஹாஹ் .. நானும் இதேதான் நினச்சேன். தப்பியது பொன்னியின் செல்வன். இனி யாரும் இதை எடுகிறேன்னு வரக் கூடாது
Post a Comment