நான் B.Sc படிக்கும்போது கிட்டத்தட்ட அம்மாஞ்ஜி மாதிரி பெரிய கண்ணாடி, அந்தகாலத்து கார்பன் மெட்டல் ஃப்ரேம் போட்டு தலையை அழுத்தி வாரி, சுருள் தலையுடன் திரிவேன். கிராமத்து சொல்வாடையும் இருக்கும். என்னுடைய பாஸ்போர்ட்டில் இருக்கும் என் பழைய போட்டோவைப் பார்த்த என் மனைவி, இந்த போட்டோவைப் பார்த்திருந்தால் நான் உன்னை ரிஜட் செய்திருப்பேன் என்பாள். அப்படி ஒரு முகம் எனக்கு. இப்போதும் அப்படித்தான், ஆனால் மீசை வளர்ந்தால், கொஞ்சம் மாறி இருக்கு. After all every dog has its day and Pair.
நான் B.Sc திருச்சியில் படித்தேன். பொதுவாக ஒரு காலேஜில் இரு விதமான Group இருக்கும். 1. தமிழ் மீடிய பசங்கள் 2. ஆங்கில மீடிய பசங்கள். அதிலும் என் போன்ற கிராமத்து அம்மாஞ்ஜிகளைக் கண்டால், வாத்தியார் உட்பட அனைவருக்கும் கொஞ்ஜம் இளக்காரம் தான். அதிலும் சில லெக்சரர்கள் வேண்டுமென்றே அவமானப் படுதுவார்கள்.
கம்பியூட்டர் சயன்சில் தலையும் புரியாதி வாலும் புரியாது, ஒரே குழப்பம் தான். எங்களது ஒவ்வொரு இயலாமையும் அவர்களுக்கு சிரிப்பாக இருக்கும்.
ஒரு சின்ன தயக்கம் மேலும் பயமும் சேர்ந்து, வார்தை வராது. வெறும் காத்து தான் வரும். இரண்டாவது ஆண்டில் ஒரு லெக்சரன் வந்தார். அவரும் நம்ம வகைதான். தமிழ் மீடியத்தில் படித்தவர். நிறைய தடுமாறுவார். நம்ம இங்லீசு மீடிய பசங்கள் சொல்லவே வேண்டாம். அதர்களம் செய்வார்கள். அவர் ஒரு நாள் பாடம் நடத்தும் போது, Center Point என்பதை மையப்புள்ளி என்றார். உடனே நம்ம பசங்கள் அவருக்கு மையப்புள்ளி என்று பெயர்வைத்தனர்.
கொஞ்சம் நாளில் நகரம் தந்த வேகத்தில் அடிப்படை மறந்து நானும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பிதேன். அதற்கு அப்புறம் நான் அவர் பெயரைச் சொன்னதில்லை. எப்போதும் மையப்புள்ளி தான். ஆவரை நாங்கள் பாடல் நடத்தவிட்டதே இல்லை. இன்னொருவர் தடுமாற்றம் இப்போது எனக்கு சிரிப்பானது.
சில வருடங்கள் கழித்து M.Sc படித்து விட்டு சென்னையில் ஒரு interview வில், ஒரு கேள்விக்கு used to holded and was the first tuple etc என்று எதேதோ உளறிக் கொட்டியபோது, எனோ எனக்கு மையப்புள்ளியின் ஞாபகாம் வந்தது.
தெய்வம் நின்று கொல்லும்......
0 comments:
Post a Comment