சில குறிப்புகள் - 24/12/2011

ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு பதிவு

முதலில் கிருஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்

Dear friend, I pray that you may enjoy good health and that all may go well with you, even as your soul is getting along well.”
III John 1:2

கவியரசரின் ஏசு காவியம் படித்த பின் எனக்கு கிருஸ்துவின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. ஏசு அவரது சொந்த சீடர்களாலேயே தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டவர். அகிம்சையின் பெயரால் வாடிக்கன் செய்த பாவங்கள் பல. கிருஸ்த்துவின் பெயராலே வேட்டையாடப் பட்ட நாடுகளும் இனங்களும் பல. ஏசு 33 வயதில் மரித்தார். அவர் 86 வயது வரை வாழ்ந்ததாக கூறுவோரும் உண்டு. அவரது கருத்துக்கள் மறக்கப்பட்டன.

இந்த நல்ல நாளில், உண்மையான அகிம்சையையும், கிருஸ்துவின் மேன்மையையும் போற்றுவோம்.

ஓ1 தேவ மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, நீ உனது தூதனை மறுபடியும் அனுப்பி வையும். அவரது தேவை முன்னெப்பவும் விட இப்போது தான் தேவை.

முல்லைப் பெரியாறு

நம்ம இனமான ராசா நம்மளயெல்லாம் குடத்துடன் போராட்டத்திற்கு கூப்பிடிருக்கிறார். அவர் படம் ஆரம்பித்தாச்சு.
அண்ணே ஒரு டவுட்டு, ஒங்க பட ஹீரோயினி யாருண்ணே? கொடத்தோட சென்னையில் மறித்து என்ன அண்ணே யூஸ்?
தேனி ஒங்க ஊருதானே. அங்க போயி புங்க வேண்டியது தானே? இப்புடித்தான், நெயிவேலிக்குப் போன நீ, என்ன புண்ணியம்?  வைகோ மாதிரி பாடர்ல போயி போரட வேண்டியது தானண்ணே. இல்லாட்டி தெம்பு இருந்தா இந்த பிரச்சனைக்கு சப்போர்ட் பண்ணி உங்க படத்திலிருந்து அந்த ரெண்டு கேரள நடிகைகளை நீக்க வேண்டியது தானண்ணே. இப்படிப் பேசியே ஈழத்தமிழனையிம், காவிரிப் பிரச்சனையையும் தீத்துட்டிங்க, இப்ப முல்லைப் பெரியாறு,  ஆமால்ல உங்க படம் ஆரம்பிச்சாச்சுல்ல. கொஞ்ச நாளைக்கு ஆட்டம் பலமாத்தான் இருக்கும்.

சேட்டன்கள்

சேட்டன்க மயிரக்கூட நம்மால புடுங்க முடியாது. என்னா, அவன் டெல்லீல எல்லா துறைகளிலும் இருக்கான்.

ரயில்வேத் துறையில் இருந்து, வெளியுறவுத்துறை என்று சேட்டன்கள் ஆட்சி தான். நாம, திராவிடன் மட்டையின்னு பேசி பேசியே அழிவோம். போயி புள்ளகுட்டியா படிக்கவைங்கப்பா..

நித்தி

நம்ம நித்தி மறுபடி ஆரம்பிச்சுட்டார் போல.. 500 புரியார் வந்தாலும், ஹும்.. நாம மாறமாட்டோம். யாரவது இவருக்கு மணிகட்டுங்கப்பா..சாரி, அவருக்கு மணி தேவையில்லை.



இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள்.. சிலரது வாழ்கை ஒரு காவியம். கவியரசரின் வாழ்கை ஒரு ரோல கோஸ்டர் அனுபவத்திற்குச் சமம்.

கவியரசர் வரிகளில் எனக்குப் பிடித்தவை பல அவற்றுள் ஒன்று


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!





சில குறிப்புகள்

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி!
----------------------------------------------------

இந்தியாவில் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனிதர்.

காந்தி இப்போது 500 ரூபாய் நோட்டில் சிரிப்பதற்கும் ஒரு நாள் லீவுக்கும் மட்டும் தான் பயன்படுகிறார்.  இப்போதுள்ள தலைவர்களுடன் அவரை ஒப்பிடுங்கள். சுபாஷ் சந்திரபோஸ் வழி வேறு, காந்தி வழி வேறு. வன்முறை பாதையில் நாம் எதையும் பெற முடியாது. காந்தி விமர்சனத்திர்கு அப்பாற் பட்டவர் அல்லர். ஆனால் பின்பற்றத் தக்கவர். 1948ல் சிதையில் ஏற்றப்பட்டது காந்தியின் உடல் மட்டுமல்ல. அவரது கொள்கையும் தான்.

நள்ளிரவில் சுதந்திரம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. இந்திய சுதந்திரத்தைப் பற்றி வந்துள்ள புத்தகங்களில் மிகச் சிறந்தது. ஆசிரியர்கள்:- டொமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ். படித்துப் பாருங்கள்.

கம்யூனிஸ்ட்
----------------------

நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள்.
ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன்.
என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்

Dom Hélder Pessoa Câmara

உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாட்டில் பார்த்த சில நிகழ்வுகள் எனக்கு கம்யுனிசத்தின்மேல் ஈடுபாட்டை கொடுத்துள்ளது. ந்மது இந்தியாவும் அதே பாதையில் செல்கிறது. மெத்தப் படித்த மேதாவி மன்மோகனும், செட்டி நாட்டிச் சீமான் சீனா தானாவும் 91 ல் நரசிம்ம ராவுடன் சேர்ந்து உலகமயமாக்கல் என்று ஏதோ புரியாத விஷயங்களிச் செய்தார்கள். இப்போது பணவீக்கம் 12% என்கிறார்கள். படிக்காத காமராஜின் தொலை நோக்குப் பார்வையும் 18 டாக்டரேட் வைத்துள்ள மக்கு மோகனின் ஒப்பிடுதல், பெருந்தலைவருக்கு அசிங்கம்.

நமது நாடும் ஒரு வித பொருளாதார திடமற்ற தன்மையினை நோக்கி போகிறது. பெருமுதலாளிகளின் பிடியில் எல்லாத் தொழிலும் போகும்போது. இரத்தம் ஒரே நிறமாகத் தோன்றாது.

விஜயதசமி
--------------------

சின்ன வயதில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை என்பது மிகவும் சந்தோஷமான பண்டிகை. தீபாவளின் ஆரம்ப ஜோர் தெரிய ஆரம்பிக்கும் வாரம். பக்கத்து ஐயங்கார் வீட்டில் கொலு வைப்பார்கள். ம‌ற்ற சமயங்களில் ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்காருக்கு மூன்று கொம்பு என்று பாடி அவரது பசங்களை கிண்டல் செய்தாலும், கொலுவிற்கு போகும் போது சினேகமாக இருப்பார்கள். தீபாவளி களைகட்ட ஆரம்பிக்கும்.பட்டாசுக் கடைகள் ஆரம்பிப்பார்கள். எல்லா கடைகளிலும் பொறி பொட்டுக் கடலை, சுண்டல் தருவார்கள்.

பிற்காலத்தில் திருச்சியில் படித்த போது ஆயுதபூஜை முதல் தீபாவளி வரை NSP ரோட்டில் அலைவோம். சாரதாஸ் வாசலில் காலை 8 மணி முதல் க்யூவில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். அன்றுதான் BHEL-ல் போனஸ் தருவார்கள்.

இப்போதெல்லாம், சாலமன் பாப்பையாவும் ( இவர் சன் டீவி வாசலில் படுத்துக் கொண்டிருப்பார் போல, 15 வருடங்களாக ஒரே முகம், ஒரே வித்மான பேச்சு), இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன..என்று போகிறது.

கடந்த‌ சில வருடங்களாக. வெளி நாட்டில், சுண்டல், பொரியை பேப்பரில் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

வேதிக் டெம்பிள் @  ரெட்மாண்ட்
-------------------------------------------------------

மனைவியின் வேண்டுதலுக்காக பக்கத்தில் இருக்கும் வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்றோம். மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் சிலரால் ஆரம்பிக்கப் பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஓரு சில நடுத்தர வயது ஐயர்கள் பஞ்ச கச்சத்துடன் லேசான குடுமி மற்றும் தாடியுடன் இருந்தனர். சில ஸ்லோகங்கள் வாசித்தார்கள். சிலர் ஐ-பாட் அல்லது ஐ-போனிலும் சிலர் கிண்டில் ரீடரிலும் பார்த்து லலிதா ஸகஸ்கர நாம்மும் , செளந்தர்ய லஹரியும் சொன்னார்கள். பொதுவாக எல்லோரது முகத்திலும் ஒருவித LSD மஹிமை தெரிந்தது. பிரசாதம் என்ற பெயரில் டின்னர் தந்தார்கள். டெக்னாலஜி என்ற பெயரில் வெங்கி காதில் ஐ-பாட் மாட்டாமல் இருந்தால் சரி.

அவர்களது கையில் இருந்த பெளதீக விஷயங்களைப் பார்த்த பின்னர், எனக்கு வைதீக காரியங்களில் நம்பிக்கை வரவில்லை.

என்னால் த‌ண்டிக்கும் தயை காட்டும் கடவுளை நம்ப முடியவில்லை. பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் கடவுள் தேவைப் படுகிறார்.




சின்ன வயதில் உக்கார்ந்த இடத்தில் இருந்து அம்மவைப் படுத்தி இம்சிக்கும் போது, எல்லாருக்கும் ஏதாவது நோய்வந்து படுப்பார்கள் எனக்கு மட்டும் எதுவும் வந்து தொலைக்க மாட்டிக்குது. ஒரு நாள் கூட ஓயிவு இல்லை என்பாள். அறுபத்து நான்கு வயதனாலும் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் சுறுசுருப்பாக இருப்பாள். சிலபேர் வரம் வாங்கி வந்திருப்பார்கள் என் அம்மாவும் அப்படித்தான்.

சமயல் வேலைகளை முடித்துவிட்டு பதினோரு மணிக்கு தட்டில் சாப்பாட்டைக் வைத்துக் கொண்டு எதாவது புத்தகத்துடன் மெதுவாக சாப்பிட்டுக் கொண்டே படிப்பாள். ஓஷோவிலிருந்து சுஜாதா, கம்பியுட்டர் என்று அவளது தேடல் விஸ்தாரமானது.

கல்யாணமாகி ரொம்ப வருஷங்கள் குடும்பத்தாரை எதிர்த்துப் பேசாமல் ஒரு இன்ரோவர்ட்டாக இருந்தாள். பின்னர் ஆம்பிவெர்ட்டாகவும் எக்ஸ்ரோவெர்ட்டாக என்று காலதோடு மாறியவள். நாங்களெல்லாம் வளர்ந்து விட்ட போது அம்மா பேசத.. என்று அடக்குவோம்.

ஊரே மாமி என்று கூப்பிடும். யாரோடும் சண்டை போட மாட்டாள். அவளது கையால் சாப்பிடாத குழந்தைகள் எங்கள் தெருவில் கிடையாது. காலையில் என்ன டிபனாக இருந்தாலும் முதலில் குழந்தைகளுக் கொடுப்பாள்.

எங்கோ கொல்லிமலை அடிவாரத்தில் பிறந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆலங்குடி என்ற கிராமத்தில் வாழ்ந்தாள். முதல் முதலில் அமெரிக்கா வந்தபோது மிகவும் இளைத்து இருந்தாள். ஸ்பேஸ் நீடில் மேல் சென்றபோது கண்களில் நீர்வர உன்னைப் பெற்ற பயனை நான் அடைந்தேன் என்றாள்.

ஒரு நாள் திடீரென்று அம்மாவை வேலூரில் சேர்த்தோம். சிஸ்டமிக் ஸ்கெலரோ டெர்மா என்றார்கள். கோடியில் ஒருவருக்கு வரும் என்றார்கள். அவள் கோடிப் பேரில் ஒருத்திதான். பேச முடியவில்லை அவளால். மெல்லச் சொன்னாள் பேசாத பேசாதன்னு சொன்ன... முடியலடா... உடைந்து போனோம்.

அவளுக்கு பொதுவாக தன்னம்பிக்கை அதிகம். ஆனால் அன்று நம்பிக்கை குறைந்த்து போல.. சட்டென்று விட்டுப்போனாள். ஊரே அழுதது. ரோஜாக்களுக்கு நடுவே அவளைக் எடுத்துச் சென்றபோது அப்பா என் தேவதையே என்ன விட்டுட்டுப் போரியே என்று அழுதபோது தேற்றிய யாரோ சொன்னார்.. சாமி தேவதைகள் பிறப்பது இல்லை இறப்ப‌தும் இல்லை.. சில சமயம் பூமிக்கு வந்து செல்வதுண்டு...

(இந்தப் படம் எடுக்கப்பட்டதிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் என் அம்மா பூமியை விட்டுச் சென்றார்).


R. வசந்தா தேவி

பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை 17/08/1947 க்கும் 17/08/2010 க்கும் இடையே பூமிக்கு விஜயம் செய்தார்

தோட்டதில் ஆதாம் ஏவாளுடன் க‌டவுளும் இருந்தார்.
மனிதன் கவலையில்லாமல் இருந்தான்.
கடவுளை விட்டு மனிதன் அறிவைத் தேட‌
மனிதனை விட்டு விலக ஆரம்பித்தார்- கடவுள்

அது மனிதன் மனமற்று இருந்த வேளை
கடவுள் உயிர்களைப் படைத்தான்
மனிதன் அதற்கு பெயர் வைத்தான்
வெறுத்துப்போய் இன்னும் விலகினார்- கடவுள்

இருளைப் படைத்த கடவுள் கண்சிமிட்டும் முன்
விளக்கோடு வந்தான் மனிதன்
மனிதனின் தேடல் ஆரம்பித்தது
தலையில் அடித்துக் கொண்டு தள்ளிபோனார் - கடவுள்

மரபை விடமுடியாமல் திணறி
ஒதுங்கியிருந்த சாத்தானின் பேரிலே
தன் குறிப்புகளை ஏற்றினான். எல்லை மீறியதால்
கண்டுகொள்ளாமல் போனார்- கடவுள்.

இருவரும் இடங்களை மாற்றிக் கொண்டனர்.
கடவுளுக்கு மனிதன் தேவை குறைந்தது
மனிதனுக்கு கடவுளின் தேவை அதிகமானது.
இயலாமல் நின்றார்- கடவுள்

கடவுள் படைத்த அனைத்தயும் வென்றான்
தேடல் அதிகமாக அதிகமாக பயம் வந்தது
க‌டவுளை மறுபடியும் தேடினான்
பயந்து போனார் -கடவுள்

பயந்த கடவுள் யோசித்தார்
தன் பெயரால் போர் செய்த மனிதன்
தேடாத‌ இடம் எதுவென்று-
ச‌ட்டென்று அவன் மனதில் சென்றமர்ந்தார் - கடவுள்

இன்னமும் மனிதன் க‌டவுளை
வெளியே தேடிக் கொண்டிருக்கிறான்.
 அதனால் தான் அவருக்குப் பெயர்
கட-உள்


பயணம்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்காக இந்தியா வந்திருந்தேன்.
எனக்கு விமான நிலையங்களில் காத்திருப்பது ஒரு பிடிக்கத விஷயம். அதனால் சியாட்டில் ஃப்ராங்ஃப்ர்ட், சென்னை மார்கமாக 21 மணி நேரத்தில் வருவது எனது வாடிக்கை.

லுஃப்தான்சா விமானத்தில் வழக்கம் போல செக்-ன் செய்து, விமானத்தில் அமர்ந்தவுடன் ஒரே தாகம். கொஞ்சம் தண்ணீர் கேட்டவுடன், ஏர்-ஹோஸ்டஸ் எரிந்து விழுந்து விட்டு தண்ணீர் தந்தாள்.  விமானம் கிளம்பிய ஒரு மணி நேரம் கழித்து லன்ச் என்ற பெயரில் எதோ கொடுத்தார்கள்.

அதை கொடுத்தபோது எனக்கு முன்னால் இருந்த வெள்ளைக்காரனுக்கு பணிவாகவும் எனக்கு கொஞ்சம் ரூடாகவும் கொடுதார்கள். உனக்க்கு குடிக்க என்ன வேண்டும் என்று என்னைக் கேட்டபோது அதில் இருந்த செருக்கும், இனப்பாகுபாடும் அப்பட்டமாகத் தெரிந்தது. நான்கு வருடங்களுக்குப் முன்பு இந்த மாதிரி இல்லை.

ஃப்ராங்ஃப்ர்ட் ஐரோப்பவில் மிகப் பெரிய சந்திப்பு. அனால் ரெஸ்ட்ரூம்கள் வசதி மிக மோசம்.  ஃப்ராங்ஃப்ர்ட் சென்னை விமானத்தில் என் பக்கத்து சீட்டில் ஒரு காலேஜ் படிக்கும் என்று நினைக்கிறேன், ஒரு பெண் அமர்ந்து வந்தது. பொதுவாக பயணங்களில் தெரிந்தவரோ, தெரியாதவரோ பார்த்தவுடன் ஒரு ஹாய் சொல்லிக் கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் பெண் கொஞ்சம் கூட சிரிக்கவே இல்லை. மேலும் அரகண்ட்டாக இருந்தது. அவளது செயல்பாடுகள் அனைத்தும் அரகண்ட்டாக இருந்தது. பயணம் முழுவதும் ஏர்-ஹோஸ்டஸ் உட்பட எல்லோரையும் முறைத்துக் கொண்டு வந்தது.

இமிகிரேஸ்ஷன் ஃபார்மில் த‌ப்புத் தப்பாக எழுதியது, நானும் நம‌க்கு என்ன என்று விட்டு விட்டேன். அந்தப் பெண் செய்த குழப்படிகளில், இமிகிரேஸ்ஷனில் கேள்வி மேல் கேள்வி கேட்ட்டு நிற்க வைத்து விட்டார்கள். சில சமயங்களில் ஒரு சின்ன ஹலோ, ஒரு புன்னகை நம்முடைய சிக்கல்களைத் தீர்த்துவிடும். எனோ எனக்கு அந்தப் பெண்னுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை.  மீதி பயணம் அடுத்த பதிவில்.

உணவு: 

நேற்று மாஜியானோ என்று ஒரு இத்தாலியன் ரெஸ்டரண்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா உணவிலும் ஒரே ச்சீஸ் .
சுத்தமாக காரம் இல்லை.ஸ்பெகத்தி, பாஸ்தா, 4  ச்சீஸ் ராவியோலி, கார்லிக் பிரட் என்று நல்ல ட்ரீட்.  அனேகமாக ரெண்டு ப‌வுண்டு ஏறியிருக்கும். எனக்கு ஐரோப்பிய அமெரிக்க உணவுகளை பற்றி ஆராய ஒரு எண்ணம் உள்ளது.

கொஸ்டின் கோயிந்து?

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்பதோடு  நிற்காமல்

வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் லோக்பால் உண்ணா விரதத்தை ஒரே மாதத்தில் உலகளாவிய பிரச்சினையாக மாற்றிவிட்ட மீடியா, உயிர் போகிற இந்த அத்யாவசிய, அவசரப் பிரச்சினைக்காக ஆதரவு காட்ட வேண்டும், என்று பாரதிராசா அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.

அப்ப ஆறேழு வருஷத்துக்கு முன்ன சின்ன சின்ன  பிரச்சனையா இருந்த காவிரிப் பிரச்சனைக்கு நெய்வேலில போயி என்ன மைத்துக்கு போராட்டம் பண்ணுன? நியென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? அது வெளம்பரம் இல்லயா? பொடாவுல உள்ள வச்சுவனுங்கன்னு ஈழத்தமிழ் மக்கள் பத்தி கொஞ்ச நாளா வாயே திறக்கல. வெளம்பரமோ என்ன எழவோ அந்தாள் போரடுரார். உண்ணாவிரத இருக்கார்.  நீ என்ன கிழிச்ச நைனா? உன்படம் ஆரம்பிச்சதால மீடியாவுல உன் பேர் வரணும்.  உனக்கு இயக்குனர் சங்கத்தேர்தலிலேயே ஆப்பு வச்சுருக்க்ணும். கொஞ்சம் வாய கொற. மொதல்ல படத்த எடு. உங்கிட்ட நாங்க எதிர்பாப்பது மொதமரியாத மாதிரி நல்ல படங்கள. இந்த மாதிரி லூசுத்தனமான பேட்டிய இல்ல‌.


என மகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் என்றால் ரொம்பப்பிடிக்கும். அதனால்தான் என் வீட்டுக்கு அருகில் இருந்த வாட்டர் பார்க்கில் ஸ்ட்ராபெரி திருவிழா என்றதும், ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

இருபது வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, விடலைப் பருவத்தில் எங்களுக்கு மே மாதம் வரும் அந்தத் திருவிழா ஒரு இனிய அனுபவம். முதலில் மாரியம்மன் பூச்சொரிதல் எப்ரல் மாதத்தில் நடக்கும். பொதுவாக எங்களுக்கு அது தேரிவு சமயம். ஒவ்வொரு தெருவிலிருந்தும் தேர் எடுத்துவருவார்கள். அன்று இரவு படம் அல்லது ரெக்கார்ட் டான்ஸ் இருக்கும். தேருக்கு முன்னால் கரகாட்டமோ அல்லது ஏதோ ஒரு ஆட்டம் இருக்கும்.

பூ வுக்கு அடுத்த வாரம் மஞ்சு விரட்டு. அதற்கு அடுத்தவாரம் திருவிழா. திருவிழா என்பது கிராமத்தின் அடையாளம். வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் கண்டிப்பாக வருவார்கள். சாமி ஊர்வலம், தரையடி கடைகள், பலகாரக்கடைகள் , கனகாம்பரம் அணிந்த பெண்கள் மற்றும் இரவு பாட்டுக் கச்சேரி என்று களைகட்டும்.


 கிராமத்துத் திருவிழாக்கள் சமீபகாலங்களாக அழிந்து வருகிரது. அல்லது சாதி சாயம் பூசப்பட்டு வருகிரது. தனது சாதியை வெளிப்படையாகப் போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதும் அதில் எதாவது ஒரு கட்சியின் பெயர் இருப்பதையும் நான் நிறையப் பார்க்கிறேன்.

ஒரு காலத்தில் திரு விழா என்பது கிராமப் பொருளாதரத்தின், வாழ்வாராத்தின் அடிப்படை. இப்போது  அதன் அச்சு முறிக்கப்பட்டு விட்டது. தோனியும், டெண்டுல்கரும் சிரிக்கும் விளம்பரங்கள் அதன் மீதி சாரத்தை உறிஞ்சுகின்றன.

கிராமத்துத் திருவிழாக்கள் சமீபகாலங்களாக அழிந்து வருகிரது. அல்லது சாதி சாயம் பூசப்பட்டு வருகிரது. தனது சாதியை வெளிப்படையாகப் போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதும் அதில் எதாவது ஒரு கட்சியின் பெயர் இருப்பதையும் நான் நிறையப் பார்க்கிறேன்.

ஒரு காலத்தில் திரு விழா என்பது கிராமப் பொருளாதரத்தின், வாழ்வாராத்தின் அடிப்படை. இப்போது  அதன் அச்சு முறிக்கப்பட்டு விட்டது. தோனியும், டெண்டுல்கரும் சிரிக்கும் விளம்பரங்கள் அதன் மீதி சாரத்தை உறிஞ்சுகின்றன.


ஸ்ட்ராபெரி விழாவில்

ஒரு தரை மேடையில் பாக்யராஜ் ஸ்டைலில் ஆடினார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்ட்ராபெரி பயிரிடும் விவசாயிகள்.
பர்ஸை காலியாக்க ரெங்கு ராட்டினம், பவுன்ஸ் வீடு போன்ற செட்டப்கள் இருந்தன. சொல்லி வைத்தார்ப்போல குழந்தைகள் அழுது புரண்டு காசை செலவு செய்தன.

 ஃப்ரென்ச் ஃப்ரைஸ், கர்லி ஃப்ரைஸ், ஐஸ் ஃப்ரூட். , பரிட்டோ இன்ன பிற ஐட்டங்களை விற்றார்கள்.  ஏதோ ஒரு மூலையில் ஒரு சின்ன ஷாமியான போட்டு பிளாஸ்ட்டிக் பெட்டிகளில் ஸ்ட்ராபெரி விற்றார்கள்.

நாங்கள் ஒரு 50 டாலரை செலவு செய்துவிட்டு வந்தோம்.




அமெரிக்கர்களுக்கு அவசரம் எங்கு தேவை என்று தெரியாது. அடுத்த நாட்டின் மேல் படையெடுக்க மட்டும் தான் அவசரப்படுவார்கள். அவர்களது வாழ்கை முறையின் வேகம் மிக அதிகம். சாலைகளில் கார்கள், பெண்களின் நடை, ஃபாஸ்ட் ஃபுட், கூடைப்பந்து  என்று பரபரப்பார்கள். ஓரு இடத்தைத் தவிர்த்து.

இரண்டு வாரமாக ஒரே வயிற்று வலி. 16 வருடங்களாக காலை உணவு அருந்துவதில்லை நான். மேலும் கடந்த இரு வருடங்களாகக் குடித்த சரக்கும் சேர்ந்து கிளப்பியது என்று நினைக்கிறேன்.  சரியென்று பக்கத்தில் இருக்கும் ஒரு அர்ஜன்ட் கேருக்குப் போனேன்.

அங்கு இன்முகம் காட்டிய front desk அம்மணி இன்சூரன்ஸ், கோ பே..( இதைப் பற்றி ஒரு விரிவான பதிவு பிறகு) இன்னபிற விஷயங்களுக்குப் பின், ஒரு சின்ன பிப்பெட்டும், ஒரு டம்ளரும் கொடுத்து, யூரின் டெஸ்டுக்குப் போகச்சொன்றார். 10 நிமிடத்திற்குப் பிறகு  சர்ஜிகல் ஜெல் போன்ற ஒரு வஸ்துவை ஒரு பேப்பர் டம்ளரில் கொடுது குடிக்கச் சொன்ணார்.
அதற்கப்புறம் தான் கேம் ஆரம்பித்தது.

ஒரு நர்ஸ் வந்து நம்ம பீபி , பல்ஸ் போன்றவற்றை எடுப்பார். ஒரு சின்ன ரூமில் நம்மளை உட்கார/ படுக்கச் செய்து விட்டு டாக்டர் வருவார் என்று சொல்லிச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வந்தார். ஒரு பெரிய பாதிரியார் அங்கி மாதிரி ஒரு நீலக் கலர் அங்கியைக் கொடுத்து விட்டுச் சென்றார். 45 நிமிஷத்திற்கு அப்புறம், மற்றொரு டாக்டர் வந்தார்.
அவர் வயிற்றை லேசாகத் தொட்டு ப்பார்த்துவிட்டு X-Ray எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுபடியும் காத்திருத்தல்.

45 நிமிடம் கழித்து மரு படியும் ஒரு லேப் ஆள் வந்து ரத்தமும், பின்பு  X-Ray எடுக்கவும் கூட்டிச்சென்றார். மரு படியும் அதே ரூமில் இருக்கச் செய்தார்கள். ஒரு மணி நேரம் கழிந்தது. ஒரு டாக்டார் வந்து,  உனக்கு ஒன்றுமில்லை,  Ranitidin நும் இன்னொறு மாத்திரையும் 30 நாலைக்குச் சாப்பிடு என்று சொல்லி ஃபார்மசியில் ஆர்டர் செய்துவிட்டேன் போய் வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டு என் பதில்லுக் காத்திராமல் சென்றுவிட்டார்.

ஒரு வயிற்று வலிக்காக கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்த்துதான் கடுப்பைக் கிளப்பியது. எங்க ஊரில் ராமகிருஷ்ணன் டாக்டரிடம் சென்றால், மெட்ரோஜில்லும் சர்ஜிகல் ஜெல்லும் கொடுத்து ரெண்டு நாள் புழுங்கல் அரிசி கஞ்சி குடி தம்பி சரியாகிவிடும் என்பார்.

ஒன்று மட்டும் புரியவில்லை.

அர்ஜன்ட் கேர் என்று எதற்காக இதற்குப் பெயர் வைத்தார்கள்?

எனக்கு அமெரிக்கர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். விளம்பர உத்திகளில் அவர்கள மிஞ்ச ஆளில்லை.
நான் வசிக்கும் சியாட்டில் அருகே கெல்சி க்ரீக்(Creek) என்று ஒரு இடம் இருக்கிறது. கிரீக் என்றால் ஒரு சிறிய ஓடை என்று பொருள்.

விஷயம் என்னவென்றால், கடந்த மூன்று மாதமாக நான் செல்லும் வழியியெங்கும் ஒரு சின்ன விளம்பரப் பலகை இருந்தது. கெல்சி கிரீக் ஆட்டு/மாட்டுப் பண்ணை கண்காட்சி என்று ஒரு தேதியும் இருந்தது. என் மனைவியும், நம்ம பாப்பாவை கூட்டிகிட்டுப் போகணும் என்று அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் சொல்லுவாள். நான்னும் சரி என்பேன். எனக்கு ஆடும் மாடும் புதியவையல்ல. கிராமத்தில் வளர்ந்ததால் நாங்கள் அவைகளோடு வளந்தோம். ஆனால் என் மூன்று வயது மகளுக்கு அவை புதியவை. இங்கு சுதந்திரமாக ரோட்டில் ஒரு மாட்டையோ ஆட்டையோ பார்க்க முடியாது. ( என்ன ஊர் இது?)

OMR ரோட்டில் ஐந்து வருடங்களுக்குப் முன்னால் நாவலூருக்கு அருகே குறைந்தது 200 மாடுகளாவது திரியும். எத்தனையோ விபத்துகள் நேர்ந்தன. நானும் தப்பித்து இருக்கிரேன். சின்ன வயதில் TVs 50 ல் அல்லது சைக்கிளில் செல்லும் போது, வழியில் தென்படும் ஆடு, மாடு, பன்னி என்று எது நின்றாலும், மெதுசால அதன் அருகில் சென்று, பின்னால் இருக்கும் பையன் ஓங்கி ஒரு உதை விடுவோம். இப்போது பரிணாமம் அடைந்து விட்டோம்.


மனைவின் தொல்லை தாங்காமல் நாங்களும் அந்த கண்காட்சிக்குச் சென்றோம். சுமார் இரண்டு மைல் தொலைவுக்கு கார் பார்க்கிங் கிடைக்கவில்லை. காரை 2 மைலுக்கு அப்பால் பார்க் செஇதுவிட்டு  நடந்து சென்று பார்த்தோம்..

வழி நெடுக பாப்கார்ன் மற்றும் பஞ்சு மிட்டாய் போன்றவைகள் விற்றார்கள். ஒரு இடத்தில் ஒரு பெரிய க்யூ இருந்தது.
ஐந்து குதிரைகளை வைத்து ஒரு ரங்கு ராட்டிணம் வைத்திருந்தார்கள். ( உண்மையான குதிரைகள்).  மேலும் டிராக்டரில் வைக்கோல் கட்டு வைத்து( சீட்டுக்குப் பதில்) 15 டாலருக்கு ட்ரிப் அடித்தார்கள். என் மகளும் பாப்கார்ன் கேட்டு உருண்டு பிறண்டு அழுதாள்.

அங்கு நிற்கப் பொறுமையில்லாமல் நாங்களும் உள்ளே சென்றோம். வழிநெடுக அமெரிக்க கணவன்மார்கள் ஹனி, பேபி என்று குழந்தைகளையும் மனைவிகளையும் கொஞ்சிக்கொண்டு, ஹீ ஈஸ் லுக்கிங் க்ரேட் என்று சொல்லிச் சென்றனர்.
அப்போதே சுதாரித்து இருக்க வேண்டும்.

ஓரு பெரிய பட்டி இருந்தது. 15 சென்ட் இடத்தில் பெரிய வேலிக்கு இடையில், ஒரே ஒரு கொழு கொழு ஆடு நின்று கொண்டிருந்தது.  ஸற்று தள்ளி ஒரு மாடு இன்னொரு பட்டியில் இருந்தது. அதைச் சுற்றி ஒரு பெரிய கும்பலே இருந்தது.


எனோ எனக்கு OMR ல் நான் பார்த்த இளைத்த மாடுகளும் நாங்கள் உதைத்து விளையாண்ட மாடுகளும் ஒரு கணம்  நினைவில் வந்து போயின...


பட இணைப்பு: பழைய படம்.



அறத்துப்பால் - இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல்

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

குழந்தைத்தன்மை என்பது கடவுள் தன்மையினும் மேலானது. அதை கட்டுப்படுத்தாமல் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள்.

என் மகள் புதிதாக ஒரு ஸ்கூலில் சேர்ந்து இருக்கிறாள். அது மான்ட‌சரி யுக்தியை கடை பிடிக்கும் பள்ளி. அந்த‌ப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. பொதுவாக நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவேன். நேற்று நான் அந்த ஆண்டு விழாவைப் பார்த்த போது எனக்கு ஒரே நாஸ்டால்ஜிக்காக இருந்தது.

என்னுடைய பள்ளிக்காலத்தில் மூன்று அல்லது நான்கு முறை ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. ஆனால், மாணவர்களது திறமையை வெளிக் கொண்டுவருவதை விட, வந்திருக்கும் MLA அல்லது விழாத் தலைவரின் இருப்பு தான் முதன்மைப்படுத்தப்படும்.

மேலும் அங்கு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சினிமா பாட்டிற்குத்தான் குழந்தைகள் ஆடுவார்கள். என்னுடைய நண்பனின் வேட்டி மேடையில் அவிழ்ந்த காமெடியும் உண்டு. 25 வருடங்களுக்கு முன்னால், பாரதியார் பாட்டு, பாரதிதாசன் பாட்டு என்று நடனமாடுவார்கள். ச‌மீபத்திய காலங்களில்,  மாங்குயிலே,, பூங்குயிலே-ல் ஆரம்பித்து இப்போது எங்கோ சென்றுவிட்டது.

குழந்தைகள் அனைவரும் விழாத்தலைவர் வரும் வரை காத்திருப்பார்கள். சிலபேர் தூங்கிப்போவார்கள். ஆனாலும் அது ஒரு நல்ல அனுபவம். பேச்சுப் போட்டியில் டேபிளில் குத்திப் பேசினால் பரிசு குடுப்பார்கள் கைதட்டல் விழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு. அது உணர்ச்சிப் பூர்வமாகப் பேசும்போது செய்ய வேண்டும் என்று தெரியாது.

நேரு 1889 ஆம் வருடம் பிறந்தார் என்று டேபிளில் நங் என்று குத்துவார்கள். ஒரு முறை நண்பர் ஒருவர் பேசியபோது பக்கத்தில் டேபிள் இல்லாததால், கிழே இறங்கிப்போய் நடுவரது டேபிளில் ஓங்கிக் குத்தி நடுவரைப் பயமுறுத்தினான்.

இன்னொருவர், பேசியபோது டேபிளில் குத்த மறந்துவிட்டு, மேடைக்கு மறுபடியும் வந்து சார் ஒரு நிமிஷம், குத்த மறந்துவிட்டேன்ன்னு சொல்லி ஓங்கி ஒரே குத்து டேபிளில், பழைய டேபிள் உடைந்து எல்லொரும் சிரித்தனர்.

இந்த நினைவுகள் எல்லாம் பசுமையானவை. காலங்கள் மாறினாலும், குழந்தைகளின் மனோபாவம் மாறுவதில்லை.

நேற்று நடந்த ஆண்டு விழாவில், பாடல்களுக்கு இரண்டரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகள் ஆடினார்கள். டீச்சர் முன்னால் நின்று சமிக்கை செய்ய குழந்தைகள் அதை திரும்பச்செய்தனர். ஒரு சில குழதைகள் கோர்வையாக செய்யாமல், சற்று தாமதமாக ஆடியது அழகாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ஒரு சிலர் வாயில் கையை வைத்துக்கொண்டு நின்றனர்.

நிகழ்ச்சின்  வீடியோ பதிவு






பல சமயங்களில் பொறுமை இழந்து தவிர்த்த இந்த விழாக்களை இப்போது மட்டும் ஏன் நான் ரசிக்கிறேன்? என் குழந்தை ஆடுவதப் பார்த்த என் கண்களில் ஏன் ஆனந்தக் கண்ணீர் வருகிறது?  புரிந்தவர் யாரேனும் சொல்லுங்கள்..






நாம் வெளிப்படையான வன்முறையையோ, நடவடிக்கையையோ தவிர்த்து விடலாம் ஆனால் விரோதத்தின் சாயலை தவிர்க்க முடியாது....
                                                                                                                                                                                                   வில்லியம் ஹால்ட்ஸ்னர்

இந்தப்பதிவு தமிழ் சினிமாவின் மேல் என்னுடைய பலநாள் கோப‌ம், வயிற்றெரிச்சல். கோபத்தின் வெளிப்பாடு கோர்வையில்லாமல் இருக்கலாம்.. அனால் உண்மையில்லாமல் இல்லை.....

த‌மிழன் ஏன் தன் தலைவனை சினிமாவில் மட்டும் தேடுகிறான்.?

இந்தக் கேள்வி என் மனதை எப்போதும் அறித்துக்கொண்டே இருக்கும். நாட்டில் சினிமாக்காரனை விட்டால் வேறு யாருமே இல்லையா? அதுவும் நம்ம தமிழ்நாட்டில் ஏன் இந்த அவல நிலை?67 க்குப் பிறகு சினிமா தொடர்புடையவர்கள் தான் தமிழ் நாட்டை ஆண்டு வருகிறார்கள். நமக்கும் ஒருவித ஆட்டு மந்தை மனநிலை வந்துவிட்டது,

30 வருடங்களுக்கு முன்னால் நம்முடைய அப்பா அல்லது ஆசிரியர் நமக்கு மாடலாகத்தெரிவார்கள். இப்போது, நடிகர்கள். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என்று கொண்டாடப்படுகிறார்கள்.

நம்மை ஆளும் அரசுகளுக்கும் நம்முடைய அறிவை வளர்ப்பதை விட நமது அறியாமையை வளர்ப்பதுதான் குறிக்கோளாக உள்ளது. ஒரு வயசிலேயே டீ.வி பார்க்கும் குழந்தைகள் மனதில் இந்த சினிமா என்னும் நஞ்சு விதைக்கப்படுகிறது. நிலா நிலா ஓடி வா போய், என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குதுன்னு 3 வயசு குழந்தை பாடுது.

சினிமாவில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்று இல்லை. எல்லாம் ஒருவிதமானவை தான். ஒரு டெம்பிளேட் கதை,  ஒரு opening பாட்டு, ஒரு குத்துப்பாட்டு, 2 duet , ஒரு ததுவம் (அ) சோகப்பாட்டு. 5 சண்டை, கொஞ்ஜம் சிரிப்பு, சென்டிமெண்ட் இல்லாட்டி கருப்புப் ப‌ணத்தை ஹீரோ ஒழிப்பார். ( இவர்களது கருப்புப் பணத்தை யார் ஒழிப்பார்?).

அடுத்து நம்ம ஹீரோக்களது இம்சை... அதுவம் ரெண்டு படம் ஹிட்டாகிவிடால் போதும், உடனே பட்டம் வேறு. இளைய தளபதி, சின்னத்தளபதி, புர்ச்சி நடிகர், எந்த சண்டையில் போய் கலந்துகிட்டார்ன்னு தளபதி பட்டம். என்ன புரட்சி பண்ணினார்ன்னு புரட்சிப் பட்டம். அப்ப உண்மையிலேயே புரட்சி செய்தவர்களை என்னவென்று சொல்வது.
ரெண்டேபடம் ஓடினால் போதும், அடுத்த முதல்வர், பிரதமர்.. அமெரிக்க அதிபர் ஆசை வந்துவிடும் இவனுங்களுக்கு.
தெரியாமத்தான் கேட்கிறேன்... ரெண்டு operation நல்லபடியாக செய்துவிட்டு ஒரு டாக்டர் முதல்வர் கனவு காண்கிறார?
அல்லது வேறு எந்தத் துறையிலாவது இந்தப் பேராசையுள்ளதா?

டைரக்டர் கதையை சொல்லும்போதே பில்டப்போடுதான் சொல்கிறார்...

டைரக்டர் :  500 அடி உயரத்தில் நீங்க தொங்குறீங்க.. உங்க கா..ல புடிச்சு ஹீரோயின் தொங்குறாங்க...
ஹீரோ : ஹீரோயினும் தொங்குராங்களா.... அப்ப 1500 அடி உயரத்ல தொங்குர மாதிரி வைங்க...

இப்படித்தான் இவர்களது பில்டப்....... பார்க்கிர ரசிகனும், தலைவர் 1500 அடி உயரத்திலே நூல புடிச்சு தொங்குறார்னு  விசில் அடிக்கிறான். இது அறியாமை இல்லை... 50 வருடங்களாயுள்ள அடிமைத்தனம்.. ( வெள்ளைக்காரனிடமிருந்து தாத்தாக்கள் காப்பாதினாங்க... இவனுகள்டேந்து யார் காப்பாத்துவா?)

அடுத்து இயக்குனர்கள்...

ரெண்டே ரெண்டு படம் எடுத்துட்டால் போதும் ஒரு இயக்குனர் என்ன வேணும்னாலும் பேசலாம், நாட்ல நடக்காததையா நாங்க எடுக்கிறோம்ன்னு சொல்றான்.  நிஜ வாழ்கையில் எந்த ஊரில் பெண்கள் அவுத்துப்போட்டுட்டு ஆடுறாங்கன்னு  தெரியல. அதுவும் அவரது பொண்டாட்டி ஒரு அறிவு ஜீவியாக நினைத்து விட்டால் போதும், எந்த சேனல்லயாவது போய் எவன வேணும்னாலும் விமர்சிப்பார்.  அனாஅவ‌ புருசன் எடுக்கும் படம்பத்தி மட்டும் பேசவே மாட்டா. சமீபத்தில் ஒரு நல்ல நாவல் இவர்களது கொத்திலிருந்து தப்பித்தது.

நடிகைகள்.....

இவர்களைப் பற்றி எழுத புதிதாக ஒன்றுமில்லை. அவர்கள் காய்த்த மரங்கள்.. எப்போதும் கல்லடி படுபவர்கள்...

சினிமா ஒரு ஃபேன்டசி சமாச்சாரம்.  அதை நீங்கள் ஒரு போழுதுபோக்காக மட்டும் செய்தால், நாங்களும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை. என்னமோ நீங்கள்தான் தமிழ் கலாச்சாரத்தின் காவலர்கள் மாதிரி பேசுவதுதான் எல்லா விமர்சனத்திற்கும் காரணம். எப்போதும் ஆட்சியாளர்களின் அடிவருடியாகவே செயல்பட்டு, மக்களை உணர்ச்சிப் பூர்வமாகத்தூண்டி ஊர் சண்டையில் ஊருகாய் நக்கப்பார்ப்பது தான் உங்களது தமிழ்ச்சேவை.

காவிரி பிரச்சனையாக இருக்கட்டும், ஈழத்தமிழர் பிரச்சனையாக இருக்கட்டும்( ஒரே ஒரு விதிவிலக்கு) எவன் வீட்டில் எழவு விழுந்தாலும், அதை உங்கள் தரம் கெட்ட விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்வீர்கள். பக்கத்து மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்படமாட்டீர்கள். உங்களுக்குத் தேவை, விளம்பரம்.

தமிழ் தமிழ் என்று வியாபாரம் செய்யும் நீங்கள், எத்தனை த‌மிழப் பெண்களை கதாநாயகியாக்கியிருக்கிரீர்கள்? கேட்டால் அது படைப்பாளியின் சுதந்திரம். தனக்கு தன‌க்குன்னா...  கிளை வெட்டும்...

தமிழ் தமிழ் என்று பேசும் சினிமாகாரர்கள் சினிமாவில் தமிழ் வாத்தியாரைத்தான் கேவலமாகக் காண்பிப்பார்கள். படைப்பாளிகள் சுதந்திரம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்ரமங்களுக்கு அளவே இல்லை.

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளந்துவிடும் என்று ஒரு மூட‌ நம்பிக்கை வேறு. ஒரு குரூப் நேட்டிவிட்டியாக படம் எடுக்கிறேன்னு கொல்ரானுங்க.  காதல், காமம், கவர்ச்சி, குடி, குட்டி இதுதான் இவர்கள் சினிமா.

அடுத்து ஆட்சி மாற்றம் வந்துவிட்டால், வேறு யாரவது தனது பதவியைத் துறக்கிறார்களா? ஆனால், சினிமா சங்கத்தலைவர்கள் மட்டும் பதவி இறங்கினார்கள். ஏன்? ஆட்சியாளர்களை எப்படியாவது அடி வருடி...***** வேண்டாம்..... கெட்ட வார்தைகள் வருகிறது.

தமிழ் அல்லது த‌மிழ் கலாச்சாரம் பற்றிப் பேச‌ சினிமாகாரன் எவ‌னுக்கும் தகுதி இல்லை.



நான் B.Sc படிக்கும்போது கிட்டத்தட்ட அம்மாஞ்ஜி மாதிரி பெரிய கண்ணாடி, அந்தகாலத்து கார்பன் மெட்டல் ஃப்ரேம் போட்டு தலையை அழுத்தி வாரி, சுருள் தலையுடன் திரிவேன். கிராமத்து சொல்வாடையும் இருக்கும். என்னுடைய பாஸ்போர்ட்டில் இருக்கும் என் பழைய போட்டோவைப் பார்த்த என் மனைவி, இந்த போட்டோவைப் பார்த்திருந்தால் நான் உன்னை ரிஜட் செய்திருப்பேன் என்பாள். அப்படி ஒரு முகம் எனக்கு. இப்போதும் அப்படித்தான், ஆனால் மீசை வளர்ந்தால், கொஞ்சம் மாறி இருக்கு. After all every dog has its day and Pair.

நான் B.Sc திருச்சியில் படித்தேன். பொதுவாக ஒரு காலேஜில் இரு விதமான Group இருக்கும். 1. தமிழ் மீடிய பசங்கள் 2. ஆங்கில மீடிய பசங்கள். அதிலும் என் போன்ற கிராமத்து அம்மாஞ்ஜிகளைக் கண்டால், வாத்தியார் உட்பட அனைவருக்கும் கொஞ்ஜம் இளக்காரம் தான். அதிலும் சில லெக்சரர்கள் வேண்டுமென்றே அவமானப் படுதுவார்கள்.
கம்பியூட்டர் சயன்சில் தலையும் புரியாதி வாலும் புரியாது, ஒரே குழப்பம் தான். எங்களது ஒவ்வொரு இயலாமையும் அவர்களுக்கு சிரிப்பாக இருக்கும்.

ஒரு சின்ன தயக்கம் மேலும் பயமும் சேர்ந்து, வார்தை வராது. வெறும் காத்து தான் வரும். இரண்டாவது ஆண்டில் ஒரு லெக்சரன் வந்தார். அவரும் நம்ம வகைதான். தமிழ் மீடியத்தில் படித்தவர். நிறைய தடுமாறுவார். நம்ம இங்லீசு மீடிய பசங்கள் சொல்லவே வேண்டாம். அதர்களம் செய்வார்கள். அவர் ஒரு நாள் பாடம் நடத்தும் போது, Center Point என்பதை மையப்புள்ளி என்றார். உடனே நம்ம பசங்கள் அவருக்கு மையப்புள்ளி என்று பெயர்வைத்தனர்.

கொஞ்சம் நாளில் நகரம் தந்த வேகத்தில் அடிப்படை மறந்து நானும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பிதேன். அதற்கு அப்புறம் நான் அவர் பெயரைச் சொன்னதில்லை. எப்போதும் மையப்புள்ளி தான். ஆவரை நாங்கள் பாடல் நடத்தவிட்டதே இல்லை.  இன்னொருவர் தடுமாற்றம் இப்போது எனக்கு சிரிப்பானது.

சில வருடங்கள் கழித்து M.Sc படித்து விட்டு சென்னையில் ஒரு interview வில், ஒரு கேள்விக்கு used to holded and was the first tuple etc என்று எதேதோ உளறிக் கொட்டியபோது, எனோ எனக்கு மையப்புள்ளியின் ஞாபகாம் வந்தது.

தெய்வம் நின்று கொல்லும்......



எனக்கு சிவப்பு விளக்கைப் பார்த்தாலே ஒரு வித பத‌ட்டம் வந்துவிடும். சின்ன வயதிலிருந்தே சொல்லப்பட்ட அல்லது படித்து தெரிந்துகொண்ட சிவப்பு விளக்கு பற்றிய எச்சரிக்கை, சிவப்பு விளக்கை பார்க்கும்போதெல்லாம், அடி வயிறில் லேசாக அட்ரினலின் ஊறும். ஒரு மெல்லிய பதட்டம் வ‌ரும்.

தினசரி பேப்பரைப் பார்த்தால், சின்ன பத்தியில் செய்திகள் இருக்கும். யாரவது ஒருவர் வாழ்கையை தொலைத்தார் என்று.
சிவப்பு ஒரு நல்ல கலர். ஆனால், சமூகம் அதை எச்சரிக்கைக்கு அதிகமாக பயன்படுத்துகிறது.

கொஞ்சம் வயதான பின்பு, சிவப்பு ஒரு அட்ராக்டிவ் கலர் என்ற நினைப்பு வந்தது. சிவப்பு ஒரு எச்சரிக்கை என்பதை ஏன் மீறக்கூடாது என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால், இந்த சிவப்பு விளக்கு இப்போது தெருவிற்குத் தெரு வந்து விட்டது.
வயதுக் கோளாறு வேறு.

அழகான பெண்கள், சிவப்பு விளக்குக்கு அருகில் நிற்கும்போது, மனது சஞ்சலபடும். சற்று நேரம் நின்று யோசித்தாலும், விளக்கிற்கு கீழே நிற்கும் மாமாவைப் பார்த்தால், லேசாக பயம் வரும். எனக்கு விபரம் தெரிந்த நாட்களிலிருந்து,
மாமாக்களுக்கு பெரிய தொப்பையும்,  மீசையும் உண்டு.

அதோடு அவர்கள் விடும் மிரட்டலுக்காகவும்,  அவர்களது குரலும், சிலநேரங்களில் அடாவடித்தனமும்........ எத்தனையோ முறை சிவப்பு விளக்கிற்கு முன்னால் நின்றுவிட்டு, கொஞ்சம் நேரம் யோசித்துச் சென்றதுண்டு.

ஒரு நாள் எதோ அவசரத்தில் சிவப்பு விளக்கு எச்சரிக்கையையும் மீறிச் சென்றபோது அங்கே நின்ற மாமா என் பைக்கை மறித்து சாவியை பிடுங்கிக் கொண்டார். அப்புறம் அங்கிருந்த பெரிய மாமாவைப் பார்த்து கப்பம் கட்டி விட்டு வருவதற்குள்,  நாக்கு தள்ளிவிட்டது.

நான் சொல்லும் சிவப்பு விளக்கு தெருவிற்குத் தெரு இருக்கும் ட்ராஃபிக் லைட். நீங்கலள் வேரு ஏதாவதை நினைத்துக் கொண்டால் அதற்கு அட்டியேன் பொறுப்பு இல்லை.

ஆனாலும் சிவப்பு என்றால்.... எச்சரிக்கை தான்.. ரோட்டில் மட்டுமல்ல.....

Save as Draft


ஏழெட்டு வருடங்களுக்கு முன்னாடி கோவையில் வேலை பார்த்க்கொண்டிருந்தோம். நாங்க 3 காலேஜ் நண்பர்கள் இன்னோரு நண்பர்.  சனிக்கிழமை ஆனா,  மாலை காந்திபுரம் அருகே இருக்கும் அடையார் ஆனந்தபவனில் சாப்பிட நாங்களும் வாரம் தவராது போவோம்.


நம்ம காலேஜ் நண்பர் வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்கள். கிட்டத்தட்ட அதுக்கு 16 வயசு இருக்கும். அதுக்கு சொத்துல பங்கு தரும் அள‌வுக்கு அந்த நாய் மேல பாசம். வராவாரம் நம்ம நண்ப‌னும் நாய்க்கு ரஸகுல்லா வாங்கிட்டுப்போவான். அவன் வேலைக்கு வந்த புதிதில் முதல் சம்பளத்தில் நாய்க்கு பெல்ட் வாங்கிக் கொடுத்தான். அவ்வளவு பாசம்.


அந்த நாயி நம்ம நண்பன் கல்யாணத்த பாக்காம டிக்கெட் வாங்கிடப்போகுதுன்னு நண்பனோட அப்பாவுக்கு ஒரே கவலை.
அது வரவர வீக்காகுதுன்னு புல‌ம்புவார். ஒரு வெட்னரி டாக்டர் வந்து பார்த்து விட்டு, சார், நாய்க்கு இதயம் பலவீனமாக இருக்கு, பையன் கல்யாணத்தைப்பத்தி நாய் முன்னாடி பேசாதிங்கன்னு சொல்லிட்டுப் போனார். 


ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல நாங்க அடயார் ஆன‌ந்த பவனில் இருந்தோம். நம்ம நண்பருக்கு அவர் தம்பி கால் செய்து, டேய், நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டார்டா என்றான். நண்பரும் அப்டியாடான்னு சொல்லிட்டு, ஒரு ரசகுல்லா வாங்கி சாப்பிட்டுவிட்டு, எங்களோடு படம் பார்க்க வந்த்தார், அப்புறமா லேட் நைட் கிளம்பிப்போனார்.


இது நடந்து இரண்டு மாதத்திற்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நாங்க ஒரு டீ கடையில் நின்று கொன்டிருந்தோம். நம்ம நண்பருக்கு அவர் தம்பி போன் செய்து, டே நம்ம தங்கம் போய்ட்டாண்டானு கததினான், கையில் இருந்த டீ கிளாஸ் மேலே பறக்க நம்ம நண்பர், சிவனந்தா காலணி பஸ் ஸ்டாப்ல உருண்டு புரண்டு அழுதார். உடனே பஸ் புடிச்சுப் போனவர், மூன்று நாள் கழித்து கண்கள் சிவந்து சோகமாக வந்தார். 


அவரது அப்பா,  கடந்த ஏழு வருடங்களாக, தங்கத்திற்கு நினைவு நாள் அனுசரிக்கிறார். 


சமீபதில் அவரது திருமணத்திற்காக அவர் வீட்டிற்குச் சென்றபோது.. தங்கம் அவர் வீட்டு ஹாலில், சீரியல் செட் போடப்பட்ட பெரிய படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. 


என்னால் சில மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.... 


எங்க அம்மா எனக்கு ஒரு சாபம் கொடுத்திருக்காங்க.. நீ கை நிறைய சம்பாதிப ஆனா வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்காது. ஏன்னா அவ்வளவு அட்டூழியம் செஞ்சுருக்கேன்.

அம்மா சமையல் எப்போதும் நல்லா இருக்கும் சும்மா வம்பிழுக்க நாங்க எப்போதும் குறை சொல்வோம்.

ஒரு நாள் கல்யாணம் ஆன பொழுதில் என்னையும் என் மனைவியையும் சென்னையில் விட்டு விட்டு என் பெற்றோர் என் சொந்த ஊருக்குப் போய்ட்டாங்க. எனக்கு ரெண்டு நாளாக ஒரே ஜுரம். என் மனைவியோ அன்னைக்குதான் மொத த‌பா ரசம் வைக்கவா கணவரே என்றாள். அவள் என்னை அப்படித்தான் கூப்ப்டுவாள். நானும் ஜுர  வேகத்தில் சரிம்மா என்றேன். வெச்சத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது அது ரசம் இல்லை விஷம் என்று.

நீதி : அரசன் அன்று கொல்வான். மனைவி ரசம் வைத்துக் கொல்வாள்.

விதி அப்படியெ விட்டுச்சான்னா இல்லை...

அன்று மாலை நண்பர் ஒருவர்,  மைலாப்பூர் ஷாப்பிங் போலாமாடான்னு கேட்டார், சரின்னு குடும்பத்தோடு எல்லோரும் போனோம். ஷாப்பிங் முடிந்து பக்கதுல இருந்த சரவண பவன்ல சாப்பிடப்போனோம். நண்பரின் மனைவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர், அதனால் அவர் எனக்கு full meals-னு முடித்து விட்டார்.

ஆனா நாங்க காட்டுப்பக்கதுல இருந்து வந்தவங்க, கொலபசிவேற, அதனால மெனுல 7 ஸ்டார் ஊத்தப்பம்னு ஒர் ஐட்டம் இருந்துச்சு, 50 அல்லது 60  ருவா இருக்கும். கிராமத்துல, 10 ருவா தோசையே நல்லா பெருசா கிளின்ட் ஈஸ்ட்வுட் தொப்பி சைசுக்கு இருக்கும். சரி ஒரே கல்லுல 7 மாங்கானு நெனைச்சுகிட்டு 7 ஸ்டார் ஊத்தப்பம் ஆர்டர் பண்ணினேன்.

சரவணபவன்ல 5 சர்வர்ருக்கு 15 சூப்ரவைசர் இருக்காங்க. தண்ணியே 20 நிமிஷத்துக்கப்புறமா தான் வந்துச்சு. எல்லாரும் பரபரன்னு இருந்தாங்க, ஆனா ஒண்ணும் நகரல (இவங்கக்கிட்ட தான் கத்துக்கனும்). 35 நிமிஷத்துக்கு அப்புறம், நம்ம 7 ஸ்டார் ஊத்தப்பம் வந்துச்சு. முக்காவாசி தபா நம்ம Appraisal paper மாதிரி எக்ஸ்பெக்டேஷன் ஆனா. ..த்தா 7 பழைய ஒரு ரூபா காசு சைசுக்கு ஊத்தப்பம் அது மேல காக்கா எச்சம் மாதிரி கொஞ்சம் சட்னி,

ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ண நண்பர் மனைவி.. நான் ஸ்டாப்பா சிரிச்சாங்க.. சில சமயம் சுற்றத்தைப் பார்த்துவிட்டு சாப்பிட்டால் தப்பே இல்லை.

அப்புறம் வெளிய வந்து, கையேந்தி பவன்ல ஃபுல் கட்டு கட்டினேன்.

என்னவோ எனக்கும் சரவணபவனுக்கும் இதுவரை செட் ஆகவே இல்லை. ஒரே ஒரு முறை கனடாவின் வான்கூவர் நகரில் மட்டும் கொஞ்சம் சுமாரா இருந்தது. அதுவும் பொண்டாட்டி சமயல ஒரு வருஷம் சாப்பிட்டுவிட்டு அங்கே போனதால....

எங்கம்மா நெஜமாவே சாபம் கொடுத்திருக்காங்க...




அவன் எப்போதும் தனிமையாக இருப்பான். நண்பர்கள் மிகக்குறைவு. லேசான பெண்தன்மையும் சற்றே தடித்த உருவமும் கொண்டவன். எங்க செட்ல அரும்பு மீசை முளைத்த மொத‌ பையன்.

வெள்ளை நிற சட்டைக்குக் கீழே நீல நிற பனியன் எப்போதும் வெளியே தெரியும்படி அணிந்து வருவான். எல்லோரும் மஞ்சள் பையில் புத்தகங்களைக் கொண்டு வருவோம். அவன் மட்டும் ஒயர் கூடையில் கொண்டு வருவான். மிக நன்றாகப் படிப்பான். கையெழுத்து மிக அழகாக இருக்கும். வீடு விட்டால் ஸ்கூல், ஸ்கூல் விட்டால் வீடு. அவனை வேறு எங்கும் பார்க்க முடியாது.

அவன் வெகுளியா இல்லையா என்று தரம் பிரிக்கத்தெரியவில்லை. ஆனால் எங்கள் பள்ளியில் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். எங்க ஊரில் இரண்டு ஆரம்பப் பள்ளிகள். ஒன்று ஆர். சி பள்ளி மற்றொன்று அரசு தொடக்கப்பள்ளி. ஆர்.சி பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகள் என்ற அபிப்பிராயம் எல்லோருக்கும் உண்டு. நாங்களெல்லாம் இரண்டாம் தர குடிமக்கள். இந்த இருவரும் அரசு பொது உயர்நிலைப் பள்ளிக்கு 9 முதல் 12 வரை படிக்க வர வேண்டும். அது ஒரு கடல்.

நான் முதலில் 9ம் வகுப்பு அடியெடுத்து வைக்கும் போது, இந்த பேதம் முதல் நாளே தெரிந்தது.  எங்கெல்லாம் பேதமும் வர்கமும் இருக்கிற‌தோ அங்கெல்லாம் ஒரு தலைவன் உருவாக்கப்படுவான். எங்களைப் போன்ற கடை நிலை மாணவருக்கு அவன் எப்போதும் துணை நின்றான். ஆர்.சி vs அரசு மாணவர்களிடையே அவன் நடுநிலையாளனாக இருந்தான். என் முதல் நண்பனும் அவன் தான்.

ஒரு நாள் இன்னொரு பையன் அவனை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிவிட்டான். நம்ம நண்பன் ஆசிரியரிடம் சென்று சார் பழனியப்பன் என்னைய‌ கெட்ட வார்த்தை சொல்லி திட்றான் சார் என்றான். அந்த ஆசிரியரோ உண்மையில் ஆ-சிறியர். அவர் என்னடா சொல்லி திட்டினான் என்றார். இவன் திரும்பத் திரும்ப கெட்டவார்த்தை சார் என்றான்.  அவரும் விடுவதாக இல்லை.

கொஞ்சம் நேரத்தில் கடுப்பான நம்ம நண்பன்  ******* சார்னு வெகுளியாகச்சொல்லி அடிவாங்கினான்.

இப்படிப்பட்ட introvert மனநிலை கொண்ட நண்பனிடம் நல்ல ஆளுமை இருந்தது.

நாட்கள் உருள,  நாங்கள் பத்தாம் கிளாசில் அடி வைத்தோம். என்போன்ற கடைநிலை மாணவர்கள் எவ்வளவோ அவமானங்களை சந்தித்தாலும், அவன் சிரித்த முகத்தோடு சொல்லுவான், பங்காளி, யார் என்ன சொன்னாலும் முயற்சியைமட்டும் விட்றாதடா!

நாங்க எல்லோரும் பத்தாவது தேறினோம். ஒரு நாள் அவன் எங்க‌ளை பிரிந்து சென்றான்.  எங்கோ அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் அவன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களில் நான் பார்த்த மிக வித்யாசமான மனிதர்களில் நண்பரும் ஒருவர்.

நான் எவ்வளவோ தேடியும் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள்  மட்டும் நினைவில் உள்ளது
பங்காளி, யார் என்ன சொன்னாலும் முயற்சியைமட்டும் விட்றாதடா!

நடராஜா நீ எங்கே இருக்கிறாய்?


குடிமகன்களுக்கு - பியர் குடிப்ப்பது எப்படி?

நீங்கள் தீவிர காந்தியத்தை பின்பற்றினாலோ அல்லது நம்ம தமிழ் குடிதாங்கி தொண்டராவோ இருந்தால் இந்தப்பதிவை தயவு செய்து படிக்காதீர்கள்.

நம்ம ஊர் டாஸ்மாக்கில் வாங்கிய அட்டு பியராக இருந்தாலும் பரவாயில்லை, பியருக்கு முக்கியமான அம்சம் அதனுடைய சில்ன‌ஸ். அதனால், ஒரு எம்டி கிளாசை எடுத்து ஃப்ரிட்ஜில் ஃப்ரிசரில் ஒரு அரை மணி நேரமாவது போட்டு வைக்கவேண்டும்.

பின்பு நன்கு குளிரூட்டப்பட்ட பியரை அதில் ஊற்றி விட்டு சில நொடிகள் பொருத்து ஒரு சின்ன சிப் செய்யவேண்டும். பின்னர் சைவமோ அசைவமோ சைடு டிஷ்சை கொஞ்சம் சாப்பிடவும்.

நம்ம ஆட்களிடம் உள்ள பெரிய பிரச்சனையே அளவுக்கு அதிகமாக சைடு டிஷ்சை வெட்டுவது. நான் பார்த்தவரையில் சைடு டிஷ் குறைவு, சரக்கு ஜாஸ்த்தி. எண்ணைப்பண்டங்களைத் தவிற்கவும். ஓரே அடியாகத் தின்றால் குற்றாலத்தில் குளித்தால் கூட *ஞ்சு நனையாத அளவு தொந்தி பெருத்துவிடும்.

மேலை நாடுகளில் பல வகையான பியர்கள் உள்ளன. நம்ம குடிமக்கள் பாபம். சபிக்கப்பட்டவர்கள். நமது அரசு ஒருவித‌மான திணிப்பை சொல்லாமல் செயிகிறது. காசு கூடக்குடுத்தால் கூட நல்ல சரக்கு கிடைப்பதில்லை. டாஸ்மாக் கடைக்காரர் குடுப்பதுதான். நான் போன வருடம் இந்தியா வந்த போது இதை நன்கு உணர்ந்தேன். நண்பர் ஒருவர் அவர் வாங்கி வந்த பியரை மாட்டு ஒன் பாத்தோடு கம்பேர் செய்து விட்டு மூன்று பாட்டில்களை பாட்டம் அப் செய்தார்.

நான் ஒரு professional குடிகரன் இல்லை. ஆனால் ஒரு பியரை எப்படி என்ஜாய் செய்து குடிப்பது என்று தெரியும்.

அதனால் அளவோடு தின்று வளமோடு குடியுங்கள்.

குறிப்பு: குடி குடியைக் கெடுக்கும்.
                  மது நாட்டுக்கு நல்லது. வீட்டுக்குக் கேடு.

                  நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பாட்டிலும், உங்கள் வீட்டுக்கு டீவியாகவோ, கேஸ் ஸ்டவ்வாகவோ அடுத்து வரும் அரசு தரப்போகிறது. எனவே, குற்ற உணர்ச்சி வேண்டாம். நீங்கள் தவணை முறையில் டீ.வி வாங்குவதாக நினைத்துக் கொள்ளவும்.


நான் வசிக்கும் இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கிருத்துவப் பள்ளி உள்ள‌து. என் மகள் அங்குதான் படிக்கிறாள். அதனுடன் சின்ன ச‌ர்ச்சும் உள்ளது. மிக அருமையான சூழல். கடந்த பிப்ரவரி மாதம்,  அந்த சர்ச்சை சேர்ந்த சில இந்தியர்கள், நம்ம குடியரசு தினத்தை கொண்டாடினார்கள். நாங்களும் சென்றோம்.

நல்ல வரவேற்பு. கனிவான உபசரிப்பு. நிகழ்ச்சி 4 மணிக்கு என்றார்கள். 5.10 க்கு ஆரம்பித்தார்கள். நான்கைந்து வெள்ளைக்கார‌ர்களும் அங்கே இருந்தனர்.  அந்த ஆடிடோரிய சுவர் முழுவதும் எழை இந்தியர்கள் போட்டோக்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இடையிடையே, தாஜ்மஹால், கேரள அரண்மனை ஒவியங்களும் இருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பித்த போது, ஒரு அமெரிக்கர் இந்தியா பற்றி உருகி பேசினார். அவர் கொல்கொத்தாவில் செய்த சேவைகள் இன்னபிற‌ விஷயங்களை சொன்னார்.  சரி கொடி எற்றுவார்கள் என்று நாங்கள் காத்து இருந்தோம்.

கொஞ்ச நேரத்தில், இப்போது கொடி எற்றப்படும் என்று மைக்கில் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.

ஒரு சின்ன் கம்பில், ஒரு இந்தியக் கொடியை கட்டி ஒரு ஆள் எடுத்து வந்தான். உடனே, AR. ரஹ்மானின், மாற்றப்பட்ட இந்திய தேசிய  கீதத்தை பெரிய திரையில் காட்டினார்கள்.

நாங்கள் அதிர்ந்து போனோம். சின்ன வயதிலிருந்தே, இந்திய அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய கீதத்தைக் கேட்டுவிட்டு இதை கேட்க, சற்று வித்தியாசமாக இருந்தது. நான், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் நீங்கள் செய்வது சரியான முறை இல்லை. அரசால் அனுமதிக்கப்பட்ட ஒலிநாடாவை இனிமேல் பயன் படுத்துங்கள் என்று சொன்னேன். அவர் எங்களுக்கு அது தெரியாது. அடுத்த முறை சரிசெய்கிறோம் என்றார்கள்.

என்னால் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

கொஞ்ச நாள் வெளிநாட்டில் வாழ்வதால், நமது சட்டதிட்டங்கள் மறந்துவிடுமா?  நமது அடுத்த தலைமுறை மக்கள், இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்தவர் யார் என்றால், ரஹ்மான் என்பார்கள். ஏற்கனவே, கே.டி குஞ்சுமோனை பாரதியாரென்று தமிழ் சினிமா சொல்லிக் கெடுத்துவிட்டது.

இந்தியா என்றால், பிச்சைகாரர்கள் நாடு என்பது எப்போது மாறும்? ஏன் நம்மைப் பற்றிமட்டும் இந்த நிலை இன்னும் உள்ளது? நம்முடைய நிலையை சினிமாகாரன் பாதி அசிங்கப்படுத்தினால், மீதியை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்கின்றார்கள். ந்மது அரசுகளும் நம்மை கையேந்தவைப்பதில் குறியாக உள்ளது.

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது போல, நாம் ஆள‌வும் அடிமைப்படுத்தவும் படைக்கப்பட்ட ஒரு நாடு தான் இந்தியா.

அந்த நாம் என்பது யார் என்பதுதான் இப்போது மாறியுள்ளது.

ஆள‌வும் அடிமைப்படுத்தவும் ஏழைகள் தேவைப்படுகிறார்கள்.

பாதி நிகழ்ச்சியுடன் நான் கழண்டுகொள்ள, அங்கு இருந்த ஒரு பெண் ஒரு பைபிளைக் கொடுத்து அவர்தம் கொள்கையை சொல்ல ஆர்ம்பித்தார்.

விடு ஜூட்........ எனக்கு எந்த சித்தாந்தத்திலும் நம்பிக்கை இல்லை.

புள்ளி ராஜா புள்ளி விபரம்:  அமெரிக்காவில் ஒரு வருடத்தில் தயாராகும் பிளாஸ்டிக் தண்ணி பாட்டில்களைக் கொண்டு உலகை 160 தபா சுத்தி கட்டலாமாம். மெய்யாலுமே, குடிதண்ணிதாம்பா.






அப்பாடா பொன்னியின் செல்வன் தப்பித்தது


நண்பர் ஒருவர் போன் செய்து மச்சான், பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆயிடுச்சுன்னு சொன்னார். மூணு வாரமா சரிய தூங்கல. அதுவும் பொன்னியின் செல்வன் கதையை பலதடவை படிச்சு வந்தியத்தேவனுடன் அரிசிலாற்றங்கரையில் நடந்து... நாடி நரம்பெல்லாம் அருள்மொழிவர்மனும் ஆதித்ய கரிகாலனும் கலந்து விட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்தது. அதுவும் நம்ம மணிரத்னம் இயக்கத்தில். அப்பா... கண்ண கட்டுதே...


மணி ஒரு காலத்தில் நல்ல இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரால் பொன்னியின் செல்வனை எடுக்க முடியுமா?


ஒரு சின்ன உதாரணம்:


பொன்னியின் செல்வன், பாகம் 4 ல் ஆதித்ய கரிகாலன் கடம்பூர் அரண்மனை விஜயத்தின்போது, வாயிற்காவலன் கட்டியம் கூறுவதை கல்கி ஒரு பெரிய பத்தியில் வர்ணித்திருப்பார். அது இதுவரை தமிழில் எழுதப்பட்டுள்ள 
உரைந‌டைகளில் மிகச்சிற‌ந்தது. அதற்கு இணையே இல்லை. 


இதை மணி எடுத்தால், கற்பனைசெய்து பாருங்கள்,


கட்டியங் கூறுபவன்: அவுஹ வந்துருக்காஹ..
கடம்பூர் சம்புவரையர்: யாரு
கட்டியங் கூறுபவன்: ஆதி
கடம்பூர் சம்புவரையர்: சரி வரச்சொல்லு


சினிமா ஒரு visual mediam. சில கற்பனைகளை அதன்மூலம் வடிவமைக்க முடியாது. அதுவும், மணிக்கு நெல்லை தமிழ் மேல் ஒரு தனி காதல். நினைத்துப்பாருங்கள், அருண்மொழி வர்மன் நெல்லைத் தமிழ் பேசினால் எப்படி இருக்கும். கேக்கவே சகிக்கலதானே? 


நம்ம டாகுடரு வந்தியத்தேவனா.. கொமட்டிகிட்டு வருதா? வானதி ஒரு அழகான பெண், நம்ம மணி, பம்பாய் படத்துல மண்ஷா கொய்ராலா ஓடி வருவது போல ஒரு சீன் வைப்பாரு. உடனே, நம்ம தமிழ் குடி தாங்கி டெல்லில ஹிந்தி படிக்கும் அவர் பேரன் முதல் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு போராட்டம் நடத்துவாரு.


நம்ம ஆஸ்கர் நாயகன் இசையில் வெட்டி வெட்டி நாலு பாட்டு இருக்கும். நம்ம மணி சம்சாரம், ஒரு அறிவு ஜீவி. அது வசனம் வேற‌ எழுதும்.  இப்போதுள்ள நடிகர்களிள், யாரும் பாதிதிரத்தோடு ஒன்றமாட்டர்கள். ஸில சமயங்களிள், சில கதைகளை, வாசகர் கற்பனைக்கே விட்டுவிடுவது நல்லது.


பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது உண்மையானால், தழ்கூறும் நல்லுலகம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது. இந்த நூற்றாண்டின் ஈடுயிணையற்ற செய்தி இது. 


மணி அவர்களே, உங்களுக்கென்ட்று ஒரு களம் உள்ளது. தயவஉ செய்து, இதை விட்டு விடவும்.


இந்த செய்தி வந்தவுடன் ஒரு Black Swan ஃப்புல் ஒய்ன் வாங்கி அடிச்சேன். அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.




Fast Five - விமர்சனம்

நடிகர்கள்: வின் டிசல் , பால் வாக்கர், ஜொர்டனா ப்ரீவ்ஸ்டர்
இயக்கம்: ஜஸ்டின் லீன்

இது Fast and Furious வரிசையில் 5வது படம். வழக்கமான கார் ரேசையும் கொள்ளையும் சேர்த்து ஐம்பது கேப்டன் படம் போல எடுத்துயுள்ளார்கள். வழக்கம் போல ஒரு பெரிய டிரக் அதை chase செய்து ஹிரோவை அவரது குழுவினர் காப்பாற்றுகிறார்கள். இது போன்ற முதல் காட்சி எல்லா Fast and Furious படத்திலேயும் உள்ளது.

சரி இன்னொரு கார் chase படம் என்று நினைத்தால், சட்டென்று படம் பிரேசிலுக்கு போகிறது. பின்பு வழக்கம்போல, கொஞ்சம் சென்டிமென்ட், நிறய Action என்று அதகளப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் அந்த கடைசி chasing seenல், 10 கேப்டன் படம் பார்த்த effect. ...த்தா, பாக்கிறவன் கேனயனா இருந்தா, வண்டி வண்டியா, பூ சுத்துறாங்கப்பா.

ஆனா, பிரேசிலை காட்டிய விதம் அருமை. ரியோ டி ஜெனிரியொ ரொம்ப அழகு.

Ocean 11 படம்போல கொஞ்சம் சாயல் இருக்கு. கெட்டவன் பணம், நல்ல திருடன் கதையை, கார் race-ஐ வச்சு சொல்லி இருக்கிறார்கள்.

நல்ல விஷயம்: செக்சி எல்சா பட்டாகி மற்றும் விதவிதமான கார்கள்

உபயோகம் இல்லாத தகவல் : படம் பாக்க வந்த‌தில் 95% யூத் பசங்க.

புள்ளி ராஜா கருத்து : Fast Five: வேகம் பத்தலை

Date : May 1, 2011. 
Rattle Snake is a beautiful place near Seattle, WA in North America. The ever green state has lots of places where people can go around and enjoy the green as well as snow mountains.
This has 1.7 miles trail that is steep and 1700 feet elevation. The path is muddy in few places and the records say that the places were approached by the native Indians before 3400 years. This is the water shed for the cedar river.
Once you climb up there, this small hill gives you a good view of near by town Bellevue and a big lake.     
Few observations
1. Enthusiastic crowd & encouraged others.
2. They tried to keep the place clean.
3. People are  linear and allowed others to bypass them if  are slow.
4. Even pregnant women climb up.
5. Lots of Indian people came this week.


This is my first ever blog post about a travel.